அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் எஃப்ஐஆரை காவல்துறை வெளியிடவில்லை- தமிழக அரசு பதில் மனு
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் எஃப்ஐஆரை போலீஸார் வெளியிடவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23 ஆம் தேதி இரவு விடுதி மாணவி ஒருவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் இவர்களை மறைந்திருந்து வீடியோ, படம் எடுத்துள்ளார்.

இதையடுத்து அவர்களிடம் போய் வீடியோவை காட்டி தன் ஆசைக்கு இணங்காவிட்டால், இந்த வீடியோவை கல்லூரி டீனிடம் காட்டி டிசி வாங்க வைப்பேன் என்றாராம். பிறகு அந்த பெண்ணின் செல்போனை பறித்து அவருடைய அப்பாவுக்கு வீடியோவை அனுப்புகிறேன் என்றாராம்.
அந்த பெண்ணும், நண்பரும் எவ்வளவு கெஞ்சியும் விடாத அந்த நபர், அந்த நண்பரை கடுமையாக தாக்கிவிட்டு அந்த பெண்ணை வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து விடுதிக்கு சென்ற மாணவி நீண்ட நேரம் அழுதுக் கொண்டே இருந்தாராம்.
பிறகுதான் தனது தோழிகளிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து போலீஸில் புகார் அளிக்க அவர்கள் கூறியதை அடுத்து கடந்த 25 ஆம் தேதி சென்னை கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அப்போது அந்த பெண்ணுக்கு அந்த நபர் யாரென்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அவருடைய உடையை அடையாளமாக சொல்லியுள்ளார். இதை வைத்து ஞானசேகரன் (37) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர் ஏற்கெனவே இதே பல்கலைக்கழகத்தில் 2010ஆம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்து கைது செய்யப்பட்டாராம்.
இவர் பிரியாணி கடை நடத்தி வருகிறாராம். கடையை மூடியதும், அண்ணா பல்கலைக்கழக சுவர் ஏறி குதித்து, அங்கு காதலர்கள் யாராவது பேசிக் கொண்டிருந்தால் அவர்களை மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதும் பணம் பறிப்பதுமாக இருந்தாராம்.
இந்த நிலையில் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழக்கறிஞர் வரலட்சுமி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை ஏற்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் இன்றே விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
அதன்படி இன்று மதியம் 2.15 மணிக்கு பிரதிவாதிகளான உள்துறை செயலாளர், மாநகர காவல் ஆணையர், பல்கலைக்கழக பதிவாளர், கோட்டூர் மகளிர் போலீஸார் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளாராம். அது போல் எஃப்ஐஆர் வெளியானது குறித்தும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மாணவியின் எஃப்ஐஆரை காவல் துறை வெளியிடவில்லை என்றும் இணையத்தில் வெளியான முதல் தகவல் அறிக்கை முடக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications