தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம்- மாநில தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதனால் மக்கள் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தொடர்பான பிரச்சினைகளை மக்கள் யாரிடம் புகார் தெரிவிப்பது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி மதுரையை சேர்ந்த கே கே ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது மாநில தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதில் அளித்தது. அதில் வார்டு வரையறை பணி முடியும் தருவாயில் உள்ளது என பதில் அளித்திருந்தது.

சட்டசபை தேர்தல்
இந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் "மக்களவை தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. 22 தொகுதி மாநில சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளுக்கு மட்டும் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது.

அழுத்தம் திருத்தமாக கூறிய தமிழக அரசு
எனவே உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த சாத்தியமில்லை. இதனால் மாநில தேர்தல் ஆணையம் விடுத்துள்ள கோரிக்கைபடி 3 மாத காலஅவகாசம் அளிக்கலாம்" என தமிழக அரசு பதில் அளித்தது. மேலும் உள்ளாட்சி தேர்தல் குறித்த முடிவை மாநில தேர்தல் ஆணையமே எடுக்கலாம் என்றும் தமிழக அரசு அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது.

எதிர்பார்ப்பு
நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் எப்போது என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது.

ஜூலை 2-ஆவது வாரம்
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் நடத்தலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் ஜூலை 2-ஆவது வாரத்தில் முடிய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications