கோவில் நகைகளை உருக்கி.. அப்படியே பிஸ்கட்டுகளாக மாற்றும் சேகர் பாபு.. அரசின் பெரிய பிளான்.. என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நகைகளை உருக்கி பிஸ்கட்டுகளாக மாற்றும் திட்டத்தில் இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே சேகர்பாபு பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கோவில்களை புதுப்பிப்பது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அன்னதானம் திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதோடு கோவில் நிலங்கள் கடந்த 4 மாதங்களில் ஏக்கர் கணக்கில் மீட்கப்பட்டு உள்ளது. பல லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. கோவில் சொத்துக்கள், நிலங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முறையாக இணையத்திலும் பதிவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து கோவில் சொத்து விவரங்களும் இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

கோவில் சொத்து
இந்த நிலையில் அடுத்தகட்டமாக கோவில் நகைகளை கவனமாக பாதுகாக்கும் முடிவில் அமைச்சர் சேகர் பாபு இறங்கி இருக்கிறார். கோவில் நகைகளை வைத்து, கோவில்களுக்கு மேலும் வருமானம் ஈட்டும் வழியை அவர் ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்துள்ளார். அதன்படி கோவில் நகைகளை மீட்டு அதை வங்கிகள், வைப்பு நிதிகள் அடிப்படையில் சேமிக்கவும், அதன் மூலம் வருமானம் ஈட்டி, அதை கோவில் பணிகளில் பயன்படுத்தவும் அமைச்சர் சேகர் பாபு முடிவு செய்துள்ளார்.

சேகர் பாபு
இது தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு அளித்த பேட்டியில், கோவில் சொத்துக்களை மீட்டு எடுப்பதில் இந்து சமய அறநிலையத்துறை வேகம் காட்டி வருகிறது. கோவில்கள், வழிபாடுகள் தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம். கடந்த மானியக்கோரிக்கையின் போது மட்டும் 112 அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறோம். இதில் ஒவ்வொரு அறிவிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமான 5 அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்துவிட்டது.

கோவில் மொட்டை
முக்கியமாக கோவில்களில் மொட்டை போட கட்டணம் இல்லை போன்ற அறிவிப்புகள் மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மொட்டை அடிக்கும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாத ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னொரு பக்கம் கோவிலில் இருக்கும் பயன்படுத்தப்படாத நகைகளை முறையான பயன்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறோம்.

குழு
மதுரை மண்டலத்துக்கு நீதிபதி ஆர்.மாலா, திருச்சி மண்டலத்துக்கு நீதிபதி ரவிசந்திரபாபு, சென்னை மண்டலத்துக்கு நீதிபதி ராஜீ ஆகியோர் தலைமையில் இதற்காக குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு மூலம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நகைகளை மீட்டு அதை உருக்க போகிறோம். மத்திய அரசின் உருக்காலையில் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றுவோம்.

வங்கி
இதை அதிக வருமானம் ஈட்டும் வகையில் மாற்றி வைப்பு நிதியாக வைக்க உள்ளோம். இதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் கோவில் திருப்பணிகள் அனைத்தையும் செய்ய உள்ளோம். இதில் கோவில்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும். இந்த நகைகள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதை முறையாக பயன்படுத்த உள்ளோம். அறநிலையத்துறைக்கு கூடுதல் வருமானம் ஈட்ட இது வழி செய்யும்.

ஆண்டு
இந்த ஆண்டுக்குள் 500 கோவில்களில் திருப்பணிகள் செய்யப்படும். இதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. கோவில் கும்பாபிஷேகங்கள் முறையாக நடத்தப்படும். கோவில்கள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவில் பணிகளை முறையாக மேற்கொள்ள முடியும். காணாமல் போன சிலைகளை மீட்க முறையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications