அமைச்சர் சேகர் பாபு கொடுத்த சர்ப்ரைஸ்.. கொஞ்சமும் எதிர்பார்க்காத கோவில் "குருக்கள்கள்".. நெகிழ்ச்சி
சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோவில் பணியாளர்களுக்கு இலவச வேக்சின் கொடுக்கப்பட்ட சம்பவம் கோவில் ஊழியர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைய தொடங்கி உள்ள நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் குறைவாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அதிக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மக்கள் பணிகள் மேற்கொள்ள வசதியாகவும் இங்கு கூடுதல் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தளர்வு
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் முழு கொரோனா விதிகளை பின்பற்றி, மாஸ்க் அணிந்து கோவில்களில் சாமி வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பூஜைகள் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

எப்படி
இந்த நிலையில் சென்னையில் உள்ள 3500க்கும் அதிகமான கோவில்கள் இன்று இயங்குவதால் கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோவில் பணியாளர்களுக்கு இலவச வேக்சின் கொடுக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு இந்த பணிகளை இன்று மேற்பார்வையிட்டார்.

வேக்சின்
சென்னை மண்டலத்திலுள்ள திருக்கோயிலில் பணியாற்றும் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. தினசரி கோவில் பணியாளர்களுக்கு தனியாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, அவர்களுக்கு வேக்சின் கொடுக்கப்படும். மக்கள் பலரை கோவில் பணியாளர்கள் இனி சந்திப்பார்கள். இதனால் இவர்களிடடம் இருந்து மக்களுக்கோ, மக்களிடமே இருந்து இவர்களுக்கோ நோய் பரவும் அபாயம் உள்ளது.

வேக்சின்
இதை தடுக்கும் பொருட்டு இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள், கோவில் குருக்கள்கள், மற்ற கோவில் பணியாளர்கள் எல்லோருக்கும் வேக்சின் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு திடீரென கோவில் ஊழியர்களுக்கு இப்படி வேக்சின் கொடுக்கும் முடிவை எடுத்தது பணியாளர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இந்த வேக்சின் முகாமை இன்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்.. பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications