மழை.. 70 வருடத்தில் பத்தே முறைதான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.. புது ரெக்கார்ட் படைக்கும் தமிழ்நாடு
சென்னை; தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை புதிய ரெக்கார்ட் படைக்க உள்ளது. பெரிய புயல் எதுவும் தாக்காமலே இந்த முறை மிகப்பெரிய ரெக்கார்ட் ஒன்று படைக்க உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த மாதம் கடைசி வாரம் தொடங்கிய இந்த பருவமழை தற்போது உச்சம் தொட்டுள்ளது. இதுவரை வங்கக்கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி உள்ளது.
அதில் ஒன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையில் சென்னைக்கு அருகே கரையை கடந்தது. முதல் தாழ்வு பகுதியும் சென்னைக்கு அருகே கரையை கடந்தது.

உருவாகவில்லை
இரண்டுமே புயலாக மாறவில்லை. இந்த நிலையில் மூன்றாவது தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூன்றாவது தாழ்வு பகுதி உருவாகாமல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மட்டுமே நீடித்து வருகிறது. ஆனால் இதே தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் மிக கனமழையை கொடுத்து உள்ளது.

சென்னை
முதல் காற்றழுத்த தாழ்வு பகுதியின் போதே இந்த சீசனில் சென்னையில் ஒரே நாளில் 25 செமீ மழை பெய்தது. அதேபோல் நேற்று தூத்துக்குடியில் 25 செமீ, காயல்பட்டினத்தில் 30 செமீ மழை பெய்தது. இதனால் தமிழ்நாட்டில் ஏற்கனவே பெய்ய வேண்டிய சராசரி வடகிழக்கு பருவமழை பெய்துவிட்டது.

தமிழ்நாடு சராசரி
தமிழ்நாட்டில் சராசரியாக 342.4 மிமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் ஏற்கனவே அந்த சராசரி அளவை தமிழ்நாடு கடந்துவிட்டது. தமிழ்நாட்டில் தற்போது வரை 583.6 மிமீ மழை பெய்துள்ளது. கடந்த 1950ல் இருந்து 70 வருடங்களில் வெறும் 10 சீசனில் மட்டுமேதான் இந்த அளவிற்கு மழை பெய்துள்ளது. இதற்கு முன் 10 சீசனில் மட்டுமே நடந்த அதிசயம் தமிழ்நாட்டில் இந்த முறை மீண்டும் நடக்கிறது.

என்ன செய்யும்
தமிழ்நாட்டில் இன்னும் 70 -80 மிமீ மழை பெய்தால் 2015ல் பெய்த மழையை தாண்டிவிடும். அதேபோல் இன்னும் 200 மிமீ மழை பெய்தால் 2005ல் பெய்த உச்சபட்ச ரெக்கார்டான 783 மிமீ சென்ற சாதனையை முறையடித்துவிடும். இன்னும் வடகிழக்கு பருவமழை முடிய நாட்கள் இருப்பதால் இந்த சாதனை முறையடிக்கப்பட வாய்ப்புள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications