அடுத்த 2 வருடங்களில்.. தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலைகளில் புதிதாக 20 டோல்கேட் அமைக்க பகீர் திட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் மேலும் புதிதாக 20 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அவை எங்கே வரும் என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அதிகப்படியான சுங்கச்சாவடிகள் இருப்பதாக நீண்ட காலமாகவே மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். இதனால் அதிகமாக இருக்கும் சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இது தேர்தல் அரசியலிலும் எதிரொலிக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பல கட்சிகள் சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தி வருகிறது.
சுங்கச்சாவடிகள்: இந்த லோக்சபா தேர்தலில் கூட ஆளும் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என்று வாக்குறுதி அளித்து வருகின்றன. ஆனால், இப்போது அதற்கு நேர்மாறான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு பகுதிகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகள் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்போது தமிழ்நாட்டில் மொத்தம் 65 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில், 12 சுங்கச்சாவடிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் திறக்கப்பட்டன, தமிழ்நாட்டில் கடைசியாகத் திறக்கப்பட்ட சுங்கச்சாவடி என்றால் அது அவினாசி திருப்பூர் அவினாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலை 381இல் உள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடி. இது கடந்த மார்ச் 1ஆம் தேதி செயல்படத் தொடங்கியது.
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள்: அதற்கு முன்பு மதுரை செட்டிகுளம் நத்தம் துவரங்குறிச்சி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 785இல் உள்ள பரளி புதூர் சுங்கச்சாவடி கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. அங்கே கடந்து செல்லும் நான்கு சக்கர வாகனம் ஒரு முறை செல்ல ரூ.180 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
மாநிலத்தில் வேறு எந்த சுங்கச்சாவடியிலும் இந்தளவுக்கு அதிக கட்டணம் இல்லை. உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மார்ச் 6ஆம் தேதி இந்த சுங்கச்சாவடியை ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் சூறையாடினர்.
எங்கே வருகிறது: இப்படிப் பல இடங்களில் ஏற்கனவே சுங்கச்சாவடிகளுக்கு கடும் எதிர்ப்பு இருக்கும் போதிலும் புதிய சுங்கச்சாவடிகளைத் திறக்க நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. பெங்களூரு சென்னை எக்ஸ்பிரஸ் சாலையில் 6 சுங்கச்சாவடிகள், சித்தூர்-தச்சூர் விரைவுச்சாலை, விக்கிரவாண்டி- சோழபுரம்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை 36இல் தலா மூன்று சுங்கச்சாவடிகள் எனப் புதிதாக 20 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட உள்ளது. அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் அந்த சுங்கச்சாவடிகளைத் திறக்க நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.
பின்னணி என்ன: 2008இல் கொண்டு வரப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் விதிகள் படியே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வருவதாகத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "இதில் நீங்கள் நெடுஞ்சாலைகள் ஆணையத்தை மட்டும் குறை சொல்லக் கூடாது.
நகரைச் சுற்றியுள்ள ஐந்து சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தோம். ஆனால், மாநில அரசு வண்டலூரை மீஞ்சூருடன் இணைக்கும் வெளிவட்டச் சாலையில் நான்கு புதிய சுங்கச்சாவடிகளைத் திறந்தது. 133 கிமீ நீளமுள்ள சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு பணி முடிந்ததும் இவை செயல்படத் தொடங்கும்" என்றார்.
லாரி ஓட்டுநர்கள்: இது குறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், "லாரி ஓட்டுநர்களிடம் மாதம் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்க வேண்டும் என நாங்கள் விடுத்த கோரிக்கையை அரசு இதுவரை ஏற்கவில்லை. தேர்தல் காலங்களில் இவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாது. ஏனென்றால் நிதின் கட்கரி சாலை அமைக்கச் செலவான தொகையைத் திரும்பப் பெற்ற சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளையும் 60 கிமீ சுற்றளவில் இரு சுங்கச்சாவடிகள் இருந்தால் அதையும் நீக்குவோம் என்றார்.
ஆனால், இரண்டு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. கட்காரி இப்போது ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டணத்தை வசூலிப்போம் என்கிறார். இதனால் நெடுஞ்சாலையைக் கடக்கும் அனைத்து வாகனங்களும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இது அனைவருக்கும் பெரும் சுமையாக இருக்கும். குறிப்பாக லாரி ஓட்டுநர்களுக்கு இது கூடுதல் சுமையைத் தான் தரும்" என்று அவர் தெரிவித்தார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications