தமிழகத்தில் அமைதியாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. சென்னையில் மந்தம்!
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது
சென்னை : தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று அமைதியான முறையில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற நிலையில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெற்ற நிலையில், கடைசி ஒரு மணி நேரம் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செயப்பட்டிருந்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 8 முனைப் போட்டி நிலவிய நிலையில், திமுக இந்த முறையும் கூட்டணியுடன் களமிறங்கியது.அதிமுக வழக்கத்துக்கு மாறாக தனித்து போட்டியிட்டது. பாமக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மநீம, அமமுக, போன்ற கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சட்டம் - ஒழுங்கை பேணி காக்க 1.33 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அமைதியான முறையில் வாக்குப்பதிவு
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சில இடங்களில் மட்டும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு காரணமாக வாக்குப் பதிவு தாமதமானது. இதனையடுத்து மாற்று இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, சற்றே தாமதமாக வாக்குப் பதிவு தொடங்கியது. மை பிரச்சினை, வாக்கு சாவடி பெயர் மாற்றம், உள்ளிட்ட சிறு சிறு சலசலப்புகள், கைகலப்புகளைத் தவிர மாநிலம் முழுவதும் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வாக்குப் பதிவு நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி மூலம் முழமையாக கண்காணிக்கப்பட்டன.

சென்னையில் மந்தம்
சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை ஐந்து மணி நிலவரப்படி சராசரியாக 60 முதல் 70 சதவீதம் வரை பெரும்பாலான மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று நிலையில் சென்னையில் மட்டும் வாக்குப்பதிவு சதவீதம் மிகக் குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களிக்க வராததால் சென்னையில் மட்டும் வாக்குப் பதிவு மையங்கள் தொடங்கப்பட்டன. சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி 41.68 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது.

சுவாரசிய சம்பவங்கள்
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களும் நடைபெற்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வயதான செவிலியர் ஒருவர் ஆம்புலன்சில் வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இதேபோல திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 100 வயதைக் கடந்த முதியவர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்ததை முடிந்தது. வழக்கம் போலவே இந்த தேர்தலிலும் முதல் முறையாக வாக்களிக்க வந்த இளம் வாக்காளர்கள் பலர் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

சிறப்பு ஏற்பாடுகள்
மாற்றுத்திறனாளிகள் உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு அளிக்க ஏதுவாக வாக்குச்சாவடி அமைந்துள்ள கட்டிடங்களை அழிவுப்பாதை மூன்று சக்கர நாற்காலி வசதி மற்றும் உதவியாளர்கள் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் கருணா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தமிழக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications