"குடும்பம் குடும்பமாக.." வந்தே பாரத் படைத்த தெறி மாஸ் ரெக்கார்டு.. தமிழக ரயில்கள் தனி சிறப்பு தான்
சென்னை: வந்தே பாரத் ரயில்களுக்குத் தென்னிந்தியாவில் கிடைக்கும் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகில் மிகப் பெரிய ரயில் நெட்வோர்க்கை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. நமது நாட்டின் இருக்கும் எந்தவொரு முக்கிய நகரத்திற்கும் நம்மால் எளிதாக ரயில் மூலம் பயணிக்க முடியும். அந்தளவுக்கு விரிவான ரயில் பாதையைக் கொண்டிருக்கிறது.

இருந்த போதிலும், இந்திய ரயில் பழங்காலத்திலேயே சிக்கிக் கொண்டதாகவும் பெரிதாக எந்தவொரு அப்டேட்டும் ரயில்களில் வருவதில்லை என்ற நீண்ட காலமாக இருந்தது. அதற்குப் பதில் அளிக்கும் வகையில் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியது தான் வந்தே பாரத்.
வந்தே பாரத்: அதிநவீன டிசைன், முழுக்க முழுக்க ஏசி, தானியங்கி கதவுகள், விபத்தைத் தடுக்க அதிநவீன கவாச் தொழில்நுட்பம் என்று வேற லெவலில் வந்தே பாரத் இருக்கிறது. இந்தியா முழுக்க பல்வேறு ரூட்களில் ரயில்வே துறை வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தி வருகிறது. மிக விரைவில் நாடு முழுக்க 150 வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்பதே இந்தியன் ரயிலேவே-இன் திட்டமாக இருக்கிறது.
சில ரூட்களில் வந்தே பாரத்திற்கு போதிய வரவேற்பு இல்லை என்ற போதிலும் தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து ரூட்களிலும் வந்தே பாரத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்றே சொல்லலாம். சமீபத்தில் இது தொடர்பாக வெளியான டேட்டாவிலும் கூட தென்னிந்தியாவில் இயங்கும் பெரும்பாலான வந்தே பாரத் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே: இதற்கிடையே வந்தே பாரத் தொடர்பாக தெற்கு ரயில்வே நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை-திருநெல்வேலி ரூட்டில் இயங்கும் வந்தே பாரத்தில் சுமார் 77% பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் பயணித்துள்ளனர். அதேபோல சென்னை-மைசூரு ரூட்டில் இயங்கும் வந்தே பாரத்தில் 42% பேர் குடும்பத்தினருடன் பயணித்துள்ளனர். இந்த ரூட்டில் பயணித்தவர்களில் சுமார் 37% பேர் பிஸ்னஸ் காரணங்களுக்காக வந்தே பாரத்தில் பயணித்துள்ளனர்.
இந்த சர்வே குறித்த விரிவான டேட்டாவை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் - திருநெல்வேலி ரூட்டை பொறுத்தவரை பெரும்பாலும் குடும்பத்தினர் உடன் தான் வந்தே பாரத்தில் பயணிக்கிறார்கள். இந்த ரூட்டில் பயணிப்போரில் சுமார் 77% பயணிகள் தங்கள் குடும்பத்துடன் பயணம் செய்கிறார்கள். மறுபுறம் 16% பேர் மட்டுமே பிஸ்னஸ் காரணங்களுக்காகப் பயணம் செய்கிறார்கள். இந்த ரூட்டில் பயணிப்போரில் 36% பேர் 35 முதல் 49 வயதுடையவர்கள் என்பதும் இதில் தெரிய வந்துள்ளது.
குடும்பம் குடும்பமாக: அதேபோல கோவை சென்னை வந்தே பாரத் ரூட்டில் 71% பயணிகள் தங்கள் குடும்பத்துடன் பயணம் செய்துள்ளனர். இந்த ரூட்டில் பயணித்தோரில் 11% மட்டுமே பிஸ்னஸ் காரணங்களுக்காகப் பயணித்துள்ளனர். மேலும், 7% பேர் சுற்றுலாவுக்காகப் பயணித்துள்ளனர். வயது வாரியாக பார்க்கும் போது 28% பேர் 35-49 வயதைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அதேநேரம் 21% பேர் 25-34 வயதுடையவர்களாக உள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த ரூட்டில் பயணித்தோர் பெரும்பாலும் குடும்பத்துடன் தான் பயணித்துள்ளனர்.
சென்னை- பெங்களூர்- மைசூர் ரூட்டிலும் கூட குடும்பமாகப் பயணிப்போரின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. அதேநேரம் இந்த ரூட்டை பிஸ்னஸ் காரணங்களுக்காகப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் மற்ற ரூட்களுடன் ஒப்பிடும் போது அதிகமாகவே இருக்கிறது. அதாவது சென்னை பெங்களூர்- மைசூர் ரூட்டில் 42% பேர் குடும்பத்துடன் பயணிக்கிறார்கள். அதேபோல 37% பேர் பிஸ்னஸ் காரணங்களுக்காகவும் 11% சுற்றுலாவுக்காகப் பயணித்துள்ளனர்.
புது ரெக்கார்டு: மேலும் தமிழ்நாட்டில் இப்போது மூன்று ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் நிலையில், பெரும்பாலான நேரங்களில் அதில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிடுகிறது. சென்னை கோவை ரூட்டில் வந்தே பாரத் 200 நாட்களை கடந்து இயக்கப்பட்டு வரும் போதிலும், பெரும்பாலான நாட்களில் டிக்கெட்கள் முற்றிலுமாக விற்று தீர்ந்துவிடுகின்றன.
வந்தே பாரத் ரயில்களில் பொதுவாக மற்ற ரயில்களை காட்டிலும் கட்டணம் அதிகம் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதனால் வந்தே பாரத்தில் மக்கள் பயணிக்க ஆர்வம் குறைவாகவே இருக்கும் எனப் பலர் கூறினாலும் கூட தமிழ்நாட்டில் நிலை அதற்கு நேர்மாறாகவே இருக்கிறது. பலரும் குடும்பம் குடும்பமாகவே வந்தே பாரத்தில் பயணிக்க விரும்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications