வேகப்படுத்துங்க.. எடப்பாடியை வளைக்க அடுத்த பிளான்.. ஸ்டாலின் தந்த கிரீன் சிக்னல்.. ஆஹா அதிருதே!
சென்னை: எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் அனுமதி கொடுத்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை எடப்பாடிக்கு எதிரான விசாரணையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி என்று பலரின் வீடுகளில் இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி உள்ளது.

எஸ்.பி வேலுமணிக்கு எதிராக ஏற்கனவே மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமி பதவி ஏற்றதில் இருந்தே இந்த ரெய்டு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டிஜிபி கந்தசாமி எளிதில் கடந்து போக கூடிய அதிகாரியும் இல்லை. தவறு என்றால் தவறு என்று நெற்றியில் அடித்தார் போல சொல்லக்கூடிய ஸ்டிரிக்ட் அதிகாரி. குஜராத்தில் அமித் ஷாவையே கைது செய்தவர் என்றால் சொல்லவா வேண்டும். சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை மும்பையின் சிபிஐ பிரிவு விசாரணை செய்த போது, அந்த வழக்கில் அமித் ஷாவை கைது செய்து அழைத்து சென்றவர்தான் கந்தசாமி. சென்ற இடங்களில் எல்லாம் ஸ்டிரிக்ட் அதிகாரி, கண்டிப்பானவர், கரை படியாதவர் என்று பெயர் எடுத்தவர். இதனால்தான் என்னவோ அவருக்கு கடந்த மே மாதம் தானாக தமிழ்நாட்டின் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத்துறை இயக்குனர் என்ற பதவியும் தேடி வந்தது.
ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி மீது பல்வேறு வழக்குகள் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக போடப்பட்டு உள்ளது. இதில் இதுவரை எடப்பாடி பழனிசாமி நேரடியாக விசாரிக்கப்படவில்லை . அவருக்கு நெருக்கமான உறவினர்கள் சிலர் மட்டும் இந்த வழக்குகளில் விசாரிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி மீது இன்னொரு முக்கியமான விசாரணையை தொடங்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.

2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை முதல்வராக இருந்து, பொதுப்பணித்துறையை கட்டுப்பாட்டில் வைத்து முறைகேடு செய்ததாக இவர் மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் செய்யப்பட்ட பணிகளில் முறைகேடு நடந்து உள்ளதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி, நாமக்கல், அரியலூர், விருதுநகர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி நாகை, ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் எல்லாம் இவர் கட்டுமான பணிகளில் முறைகேடு செய்துள்ளார்.
4080 கோடி ரூபாய்க்கு செய்யப்பட்ட பணிகளில் இவர் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கொடுத்துள்ள நிலையில், விரைவில் லஞ்ச ஒழிப்புத்துறை இதில் விசாரணையை தீவிரப்படுத்தும் கூறப்படுகிறது. அதோடு இவர் மீது வழக்கு பதியவும், அது தொடர்பாக ரெய்டு நடத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

முதல்வர் ஸ்டாலின் விசாரணைக்கு கிரீன் சிக்னல் கொடுத்த நிலையில்தான், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கோடநாடு வழக்கில் எடப்பாடி பெயர் அடிபட்டு வருகிறது. கோடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி கைக்கு சென்றுள்ள நிலையில் வழக்கு விசாரணை கோணம் அப்படியே மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் கோடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். இந்த எஸ்டேட்டில் இருக்கும் சில முக்கியமான கோப்புகள் காணாமல் போனதாக தகவல்கள் வந்தன. இந்த கோப்புகளை திருடத்தான் அங்கு கொலை நடந்தேறியதாகவும் கூறப்பட்டன. அதன்பின் கொள்ளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த கோடநாடு மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை பற்றி தமிழ்நாடு போலீஸ் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது.
இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு சினிமாவில் காட்டப்படுவது போல பல திருப்பங்களுடனும், புதிர்களுடனும் நகர்ந்து செல்கிறது. 5 தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இப்படி வழக்கின் போகஸ் எடப்பாடி பக்கம் திரும்பி உள்ளது. இந்த நிலையில்தான் வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications