Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுவரை சென்னையை தாக்கிய சுனாமிகள், நில அதிர்வுகள் எத்தனை தெரியுமா?.. பட்டியலை வெளியிட்ட வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இதுவரை 3 முறை சுனாமி ஏற்பட்டதாகவும் அவை மூன்றும் சக்தி வாய்ந்ததாக இருந்ததாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பட்டியலிட்டு காட்டியுள்ளார்.

வங்கக் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. நுங்கம்பாக்கம், தி நகர், அண்ணாநகர், கொளத்தூர், மாதவரம், பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வானது உணரப்பட்டது.

இதனால் அடுத்து சுனாமி ஏற்படுமோ என்ற அச்சத்துடன் மக்கள் இருந்தனர். இந்த நிலையில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெளிவுப்படுத்தியுள்ளார்.

சென்னையில் உணரப்பட்டது

சென்னையில் உணரப்பட்டது

எங்கோ தூரத்தில் ஒரு பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும் அவை சென்னையில் உணரப்பட்டது குறித்து முழு விவரங்களை தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி முதல் முறையாக 1819 ஆம் ஆண்டு கட்ச் பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அதன் தாக்கம் சென்னையில் இருந்தது. இதன் ரிக்டர் அளவுகோல் 8 ஆக பதிவாகியிருந்தது.

வந்தவாசி மையம்

வந்தவாசி மையம்

அது போல் கடந்த 1822 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை மையமாக கொண்டு லேசான நில அதிர்வு சென்னையில் ஏற்பட்டது. இதன் ரிக்டர் அளவு கோல் 5 ஆக பதிவானது. பின்னர் பர்மாவில் அராகன் கடற்கரையை மையமாக கொண்டு 1858 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சென்னையில் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியிருந்தது.

சென்னையில் அதிர்வு

சென்னையில் அதிர்வு

1859 ஆம் ஆண்டு ஓங்கோலை மையமாக கொணட் ஜூலை 21 ஆம் தேதி ஏற்பட்ட நில அதிர்வு சென்னையிலும் உணரப்பட்டது. இதன் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. இதையடுத்து நிகோபார் தீவுகளை மையமாக கொண்டு கடந்த 1881 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.9 ஆக பதிவானது. இதனால் சென்னையில் சுனாமி ஏற்பட்டது.

கோவையில் வலையாறு

கோவையில் வலையாறு

கோவையில் வலையாறை மையமாக கொண்டு 1900 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டது. இதன் ரிக்டர் அளவுகோல் 6ஆக பதிவாகியிருந்தது. 1905 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி மீண்டும் ஓங்கோலை மையமாக கொண்டு நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 5 ஆக பதிவாகியிருந்தது. இதன் தாக்கம் சென்னையில் இருந்தது.

எல்லையில் மையம்

எல்லையில் மையம்

1934 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பீகார்- நேபாளம் எல்லையை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கமானது ரிக்டரில் 8 ஆக பதிவாகியுள்ளது. 1941 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி அந்தமான் தீவுகளை மையமாக கொண்டு 8.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அன்றைய தினம் சென்னையில் சுனாமியும் ஏற்பட்டது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்

சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்

இதையடுத்து குஜராத்தை மையமாக கொண்டு 26 ஆவது ஜனவரி 2001 ஆம் ஆண்டு 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டது. அதே ஆண்டில் செப்டம்பர் 23 ஆம் தேதி பாண்டிச்சேரியை மையமாக கொண்டு 5.2 ரிக்டரில் பதிவான நிலஅதிர்வு சென்னையிலும் உணரப்பட்டது. கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுமத்ரா தீவுகளை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 9.3 ஆக பதிவானது. அன்றைய தினம் சென்னையில் சுனாமி ஏற்பட்டது.

அந்தமான் தீவுகள்

அந்தமான் தீவுகள்

இது போல் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி அந்தமான் தீவுகளை மையமாக கொண்டு நிலநடுக்கம் 7.7 ரிக்டரில் பதிவானது. இதனால் சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 8.6 ஆக பதிவானது. இதனால் சென்னையிலும் உணரப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளை மையமாக கொண்டு 7.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் 2016 இல் பர்மாவை மையமாக கொண்டு 6.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது. பின்னர் 2019ஆம் ஆண்டு வங்கக் கடலை மையமாக கொண்டு ஏற்பட்ட நில அதிர்வு, ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக பதிவானது. அந்த வகையில் இன்றைய தினம் வங்கக் கடலை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டது. இதன் ரிக்டர் அளவுகோல் 5.1 ஆகும் என வெதர்மேன் தெரிவித்துள்ளார். இவ்வாறு திருவண்ணாமலை , கோயமுத்தூர், பர்மா, அந்தமான், சுமத்ரா, இந்தோனேஷியா, நேபாளம், வங்கக் கடல் உள்ளிட்ட சென்னைக்கு மிக தூரத்தில் நிலநடுக்கங்கள் ஏற்பட்ட போதிலும் அவை சென்னையில் லேசாக உணரப்பட்டதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+