இந்த காற்று திசை மாறினால் ஆல் இஸ் வெல்.. இல்லாவிட்டால் இன்றும் தகிக்கும்.. வெதர்மேன் அப்டேட்
சென்னை: வடதமிழகத்தில் நேற்றை போல் இன்றும் வெப்பம் கொளுத்தும். ஆனால் ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் வெயில் இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வடதமிழகமான திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுவை ஆகிய பகுதிகளில் வெப்பம் சுட்டெரித்தது. இங்கெல்லாம் 2ஆவது நாளாக மழை பெய்துள்ளது.

மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தினாலும் மழையை கொடுத்தது. இந்த மழையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இன்றும் வடதமிழகத்தில் வெயில் கொளுத்தும். இதற்கு காரணம் ஆந்திரா மாநிலம் ராயலசீமாவிலிருந்து வறண்ட காற்று வடதமிழகம் நோக்கி வீசுகிறது.
இந்த வறண்ட காற்று வீசும் திசை மாறாவிட்டால் வெப்பம் இருக்கும். வரும் ஜூன் 10, 11 ஆகிய தேதிகளில் வடதமிழகத்தில் வெப்பத்திற்கு ரெஸ்ட் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார். அது போல் அவர் இன்னொரு பதிவில் கூறியிருப்பதாவது: ஆந்திராவிலிருந்து வரும் இடியுடன் கூடிய உயர்ந்த மேகக் கூட்டங்கள் கடலுக்குள் சென்றுவிட்டது.
இதனால் வடதமிழகமான வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், சென்னை, புதுவை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆகிய பகுதிகளில் வெப்பம் 40 டிகிரி வெயில் கொளுத்தும் என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் குறிப்பாக சென்னையில் 106 டிகிரியை தொட்டது வெப்பம்.

ஆயினும் கடந்த 2 தினங்களாக சென்னையில் மழை அதிகளவில் பெய்து வருகிறது. இதனால் சற்று வெப்பம் தணிந்துள்ளது. அதிலும் அதிக காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. இந்த காற்றால் அமைந்தகரையில் பல இடங்களில் போர்டுகள் சரிந்து விழுந்தன. மேற்கூரைகள் பறந்தன. ஏதோ புயல் போல் இருந்தது. சென்னையில் இன்று அதிகாலையும் சில இடங்களில் மழை பெய்தது.
நேற்றும் இன்றும் 108 டிகிரி வெப்பம் கொளுத்தும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications
