அடுத்த வாரம் பாருங்க மேட்டூர் அணைக்கு எவ்ளோ நீர்வர போகுது.. எல்லாமே புதிய வரவின் மேஜிக்.. வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் போது மேற்கு கடற்லோர பகுதிகளில் பருவமழை அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியது. இதனால் கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அது போல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளும் மழைக்கு தப்பவில்லை.

இந்த நிலையில் சென்னையில் கடந்த 4 தினங்களாக பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

காற்றழுத்தம்

காற்றழுத்தம்

இன்று அல்லது நாளை வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழையானது படிப்படியாக குறையும் என்றும் சொல்லப்பட்டது.

மழை

மழை

இந்த நிலையில் இதுகுறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும்.

அணைகள்

அணைகள்

ஆனால் மேற்கு கடலோர பகுதிகளில் உள்ள கேரளா, கர்நாடகா, காவிரி நீர் பிடிப்பு பகுதிகள், நீலகிரி, வால்பாறை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பருவமழை தொடங்கும். கர்நாடகாவில் உள்ள காவிரி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

மேட்டூர் அணை

மேட்டூர் அணை

இதனால் ஒரு வாரம் கழித்து மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார் பிரதீப் ஜான். ஏற்கெனவே பெய்த மழையால் கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பிய நிலையில் தமிழக- கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+