வடக்கால துணி காய வச்சிக்கலாம்.. தெற்கால குடைய கைல வச்சிக்கணும்.. சூப்பர் போஸ்ட் போட்ட வெதர்மேன்
சென்னை: சென்னையில் இன்று வெயில் காயும் என்பதால் இன்றே துணிகளை துவைத்து காயவைத்து கொள்ளுங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவை காரணமாக தமிழகத்தில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இன்று வரை சென்னையில் பல இடங்களில் வெள்ளம் வடியவில்லை. மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அது போல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நீர் நிலைகள் உடைந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம்
இதனால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நவம்பர் 7, 11, 18 ஆகிய 3 நாட்கள் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த 3 நாட்களும் தமிழகத்தில் மழைக்கு தரமான சம்பவங்களாகவே இருந்தன. இந்த நிலையில் இதுவரை உருவான இரு காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும் புயலாக மாறவில்லை.

காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது 48 மணி நேரத்தில் தீவிரமடையும் என சொல்லப்படுகிறது. இதனால் நாளை முதல் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாத நிலையில் மேலும் மழையா என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

தென் தமிழகம்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தென் தமிழகத்தை நோக்கி நகரும் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் தெற்கு கேரளா பகுதிகளில் மழை பெய்யும்.

துணி துவைத்து
மற்றபடி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தினர் துணியை துவைத்து காய வைத்துக் கொள்ள இன்று சரியான நாளாகும் என தெரிவித்துள்ளார். அது போல் வரும் 26ஆம் தேதி முதல் சென்னையில் கனமழை பெய்யும் என்பதையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications