சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஃபனியால் வந்த வினை.. சுட்டெரிக்கும் வெயிலில் தகிக்கும் தமிழகம்.. இங்கெல்லாம் செம அனல்.. வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் அனல் தகிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ஃபனி புயலினால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும். திருத்தணி- வேலூர் பகுதிகளில் 43 முதல் 44 டிகிரி வரை வெப்பம் தகிக்கும்.

Tamilnadu Weatherman says that Chennai outskirts will sizzle with over 41-42 C

திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், விருதுநகரில் 42 டிகிரி வரை இருக்கும். மதுரை, நாமக்கல், திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை பகுதிகளில் 41 முதல் 42 டிகிரி வரை இருக்கும்.

கரூர், சேலம், தருமபுரி, ஈரோடு, தூத்துக்குடி, நெல்லை ஆகிய பகுதிகளில் 40 முதல் 41 டிகிரி வரை இருக்கும். சென்னை புறநகர் பகுதிகளில் 41 முதல் 42 டிகிரி வரை அனல் இருக்கும். அது போல் சென்னையில் 40 டிகிரி வரை இருக்கும்.

குடையோடு நடமாடுங்கள்.. இன்றுமுதல் கடும் வெயில்.. எல்லாம் ஃபனி செய்த கைங்கரியம்- தமிழ்நாடு வெதர்மேன் குடையோடு நடமாடுங்கள்.. இன்றுமுதல் கடும் வெயில்.. எல்லாம் ஃபனி செய்த கைங்கரியம்- தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையின் மேற்கு பகுதிகளும் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், ஒரகடம், மண்ணிவாக்கம் ஆகிய இடங்களில் 41 முதல் 42 டிகிரி வரை இன்று கடும் வெப்பம் நிலவும்.

கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் வெப்பம் தணியும். எஞ்சியுள்ள பகுதிகளில் வெப்பம் தகிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu Weatherman says that Chennai will see around 40 C.. The western parts of Chennai and suburbs such as Ambattur, Poonamalle, Avadi, Redhills, Oragadam, Mannivakkam and all others will see very hot day with over 41-42 C.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X