புதுவை டூ டெல்டாவுக்கு பாயிண்ட் டூ பாயிண்ட்டாக செல்லும் மழை.. ஆனா சென்னையை விடாது.. வெதர்மேன்
சென்னை: பாண்டிச்சேரி, கடலூர், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் கூறுகையில் பாண்டிச்சேரியிலிருந்து டெல்டா வரை கனமழை பெய்யும். காற்று குவிதல் அந்த பகுதியில் இருப்பதால் கனமழைக்கு வாய்ப்புண்டு.
சென்னையில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்யும். மேகக் கூட்டங்கள் சென்னையில் சூழ்ந்திருப்பதால் வழக்கம் போது நள்ளிரவு முதல் காலை வரை மழை பெய்யும். தற்போது சென்னையின் தெற்கு பகுதியில் மழை பெய்து வருகிறது.

கிழக்கு கடற்கரை சாலை
தென் சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, செங்கல்பட்டு பகுதி ஆகியவற்றில் நேற்று மழை பெய்யாத நிலையில் இன்று அப்பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழையை கொடுக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் நாகை முதல் சென்னை வரை நவம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் மழ பெய்யும்.

கடலூர்
இதற்கு இன்னும் இரு தினங்கள் உள்ளன. இவை நடப்பதற்கு முன்னர் இன்று பாண்டிச்சேரி- கடலூர்- நாகை- ராமநாதபுரம் வரை நல்ல கனமழை பெய்யும். அத்துடன் தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு, கேரளாவிலும் காற்றின் திசை மாற்றத்தால் மழை பெய்யும். ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு செம மாஸான நாள் எனலாம். இன்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

செய்யூர்
அதன்படி பெரம்பூரில் 137 மி.மீ. மழையும் செய்யூரில் 132 மி.மீ மழையும், மதுராந்தகத்தில் 126 மி.மீ. மழையும் சோழவரத்தில் 125 மி.மீ. மழையும் தண்டையார்பேட்டையில் 103 மி.மீ. மழையும் அயனாவரத்தில் 94 மி.மீ. மழையும். கும்மிடிப்பூண்டியில் 91 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக காரைக்கால், புதுச்சேரியில் 50 மி.மீ மழை பதிவாகியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சாலைகளில் தண்ணீர்
சென்னையில் கடந்த இரு தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தலைநகர் சென்னையின் பெரும்பாலான இடங்களில் இருளில் மூழ்கியுள்ளன. மேலும் சென்னையில் கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications