"ஹாட் ஸ்பாட்" மாவட்டங்கள்.. அடுத்தடுத்த சுழற்சிகள்.. வாரந்தோறும் காற்றழுத்தம்.. வெதர்மேன் அப்டேட்!
சென்னை: வடகிழக்கு பருவமழை சீசனில் வாரந்தோறும் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய காலங்களில் வடகிழக்கு பருவமழைக்கு உகந்த மாதங்களாகும். இந்த மாதங்களில் பெய்யும் மழையை பொருத்தே தமிழகத்தில் கோடை காலங்களில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.
இது விவசாய தேவைக்கும் குடிநீருக்கும் ஆதாரம் என்பதால் இந்த மழை தமிழகம் மற்றும் புதுவைக்கு நிச்சயம் தேவை. சில ஆண்டுகள் பருவமழை பொய்த்ததால் நீர் நிலைகள் வறண்டு மக்கள் தண்ணீர் பஞ்சத்தை சந்தித்தனர்.

விவசாயம் பாதிப்பு
தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு பருவமழையை தாண்டி மழை பெய்ததால் நீர் நிலைகள் நிரம்பின. இதனால் தண்ணீர் பஞ்சம், நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு உள்ளிட்டவை இல்லாமல் பிழைத்தோம். அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே காலநிலையில் மாற்றம் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகை
கடந்த தீபாவளி பண்டிகை முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் குளிர்ச்சியான சூழலே நிலவியது. 2ஆவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை 2 வாரங்கள் கழித்தே தொடங்கியது. இதன் எதிரொலியாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. அது போல் புறநகர் பகுதிகளிலும் பாரபட்சம் இல்லாமல் பெய்தது.

தமிழ்நாடு வெதர்மேன்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது: வடதமிழக கடலோர பகுதிகளான நாகை, காரைக்கால், கடலூர், விழுப்புரம் உள்ளிட்டவை இன்றும் நாளையும் ஹாட் ஸ்பாட்டுகளாக இருக்க போகின்றன. அது போல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் நாளை வரை மிக அதிக கனமழை பெய்யும்.

தென் கேரளா
தென் கேரளா பகுதிகளான திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, ஆலப்புழா மற்றும் தமிழகத்தின் தென் கோடியான கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இன்று முதல் நாளை வரை மழை பெய்யும். நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலோரத்திற்கு அருகே உள்ள உள் மாவட்டங்களுக்கும் மழை இருக்கும்.

அடுத்தடுத்த சுழற்சிகள்
மேற்கண்ட இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு வரும் நாட்களில் மழை பெய்யும். தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு மழை பெய்ய போகிறது. அடுத்தடுத்த வளிமண்டல சுழற்சிகள் ஏற்பட போகின்றன. வாரந்தோறும் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பிருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவில் தெரிவித்துள்ளார். நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் முந்தைய ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications