மே மாத இறுதியில் அரபிக் கடலில் சுவாரசிய மாற்றங்கள் இருக்கும்.. வெதர்மேன் கணிப்பு
சென்னை: மே மாத இறுதியில் அரபிக் கடலில் சுவாரஸ்யமான மாற்றங்கள் ஏற்படும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த 2 அல்லது 3 நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகமாக தகிக்கிறது. சென்னையில் வெப்பநிலை 107 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. திருத்தணியில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை உயர்ந்தது.
இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவியுள்ளது. தமிழகத்தில் மேலும் இரு தினங்களுக்கு அனல்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வெப்பம்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் கடல் காற்று வந்துவிட்டது. எனவே எதிர்பார்த்தப்படி இன்று முதல் சென்னையில் வெப்பநிலை குறையும். இனி சென்னையில் 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் பதிவாகாது.

கடலில் மாற்றங்கள்
கடந்த 19-ஆம் தேதி தேதிக்கு முன்னர் சென்னையில் எப்படி இருந்ததோ அந்த அளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்பும். வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள இடங்களில் வெப்பம் தொடரும். மாத இறுதியில் அரபிக் கடலில் சில சுவாரஸ்மான மாற்றங்கள் ஏற்படுவது போல் தெரிகிறது என்றார் பிரதீப் ஜான்.

ஏமாற்றம்
கத்திரி வெயில் தமிழகத்தில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. வேலை செல்வோர் ஜூஸ் கடைகள், கரும்பு ஜூஸ் கடைகள் இல்லாது வெயிலில் அவதிப்படுகிறார்கள். நேற்று மாலை வானம் மூடியது போல் மூடி ஏமாற்றத்தை தந்துவிட்டது.

சுட்டெரிக்கும் வெயில்
ஆம்பன் புயல் கடந்த புதன்கிழமை மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே கரையை கடந்தது. இந்த புயல் சென்னையிலிருந்து 950 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்த போது லேசான மழை பெய்து பூமியை குளிர வைத்தது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications