குட் பை! கேடிசிசி பெல்ட்டுக்கு இது கடைசி மழை.. குறைந்த நேரத்தில் அதிக மழை.. வெதர்மேன் அப்டேட்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வலுவிழந்து கடலில் கலந்த காற்றழுத்தத்தின் கடைசி மழை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை காலமான இந்த நவம்பர் மாதத்தில் வங்கக் கடலில் முதல் காற்றழுத்தம் உருவாகி அது புயலாக வலுப்பெறவில்லை. இது நவம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நல்ல மழையை கொடுத்தது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்தது. அதிலும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பேய் மழை பெய்தது.

காற்றழுத்தம்
இந்த நிலையில் காற்றழுத்தம் வலுவிழந்து தமிழகத்தின் உள்மாவட்டங்கள் வழியாக அரபிக் கடலில் போய் கலந்தது. எனினும் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக நேற்று காலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மதிய வேளையிலும் லேசான மழை பெய்தது.

சென்னையில் மழை
இந்த நிலையில் சென்னையில் காலை முதலே வெயில் எட்டி பார்க்கத் தொடங்கியது. திடீரென ஒரு 12.30 மணிக்கு சென்னையில் மழை பெய்தது. பயங்கர இடி சப்தத்துடன் இந்த மழை பெய்தது. மிக பெரிய சப்தத்தில் இடி இடித்ததால் அச்சம் நிலவியது. சென்னையின் முகப்பேர், அம்பத்தூர், அண்ணாநகர், கோயம்பேடு, அமைந்தகரை, சூளைமேடு, ஊரப்பாக்கம், ஆதனூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சில மணி நேரங்கள் இந்த மழை நீடித்தது.

வெதர்மேன்
எம் எம் டி ஏ காலனி, நுங்கம்பாக்கம், வடபழனி, அரும்பாக்கம், நெல்சன் மாணிக்கம் சாலை, திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், ராயப்பேட்டை, கொளத்தூர், பெரம்பூர், சேத்துபட்டு, கே கே நகர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 9 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்தமாகி பின்னர் காற்றழுத்தாமாக வலுவிழந்தது. இது தற்போது அரபிக் கடல் வழியே சென்றுவிட்டது.

கடைசி மழை
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கடைசியாக மழை பெய்கிறது. அதாவது கடந்த காற்றழுத்தத்தின் கடைசி மழை இதுவாகும். இது குறைந்த நேரத்தில் அதி தீவிர மழையை கொடுக்கும். வேறு எங்கும் மழை இல்லை என குறிப்பிட்டுள்ளார். அது போல் நெட்டிசன்கள் கடலூரில் வெயில் இருப்பதாக சொல்கிறார்கள். அது போல் மேடவாக்கத்திலும் வெயில் எட்டி பார்த்துள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications