சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்.. மே 19- 22 வரை சென்னையில் மழை பெய்யும்- வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தம் மே 23 ஆம் தேதி உருவாகிறது என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் சென்னையில் மழை எப்போதும் என்கிற காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாவதற்கு முன்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்வதும் காற்றழுத்தம் உருவானதும் மழை குறைவதும் ஏன் தெரியுமா ?

17ம் நூற்றாண்டின் வில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு.. 400 ஆண்டுகள் பழமையானது! 17ம் நூற்றாண்டின் வில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு.. 400 ஆண்டுகள் பழமையானது!

டவ் டே புயலின் வீரியம் குறைவு மற்றும் மேற்கு நோக்கி வீசும் காற்று வலுவிழந்து வருவதால் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புயலாக மாறும்.

காற்றழுத்தம்

காற்றழுத்தம்

வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாவதற்கு முன்பு சென்னையில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிலும் வரும் மே 19 முதல் 22 வரை மழை பெய்ய ஏற்ற காலகட்டமாகும். காற்றழுத்தம் உருவாதற்கு முன்னர் சென்னை உள்பட 3 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு முக்கியமான காரணம் உள்ளது.

வெப்பச்சலனம்

வெப்பச்சலனம்

அதாவது காற்றழுத்தம் உருவாவதற்கு முன்பு வெப்பச்சலனமானது தமிழகத்திற்கு செல்கிறது. குறிப்பாக வட தமிழகம் அல்லது தெற்கு ஆந்திரம் பகுதிகளில் செல்கிறது. வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகிவிட்டால் வெப்பச்சலனத்தால் பெய்யும் மழை குறைகிறது.

ஒடிஸா

ஒடிஸா

காற்றழுத்தம் உருவானவுடன் அது ஒடிஸா மற்றும் மேற்கு வங்கம் செல்கிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள பகுதிகளில் வெப்பச்சலனம் தடைபடுகிறது. மேற்கத்திய காற்று வலுபெறுகிறது. இதனால் அரபிக் கடலில் இருந்து காற்று இழுக்கப்பட்டு கேரளா மற்றும் தமிழகத்தின்மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பருவக்காற்றை செயல்படுத்துகிறது.

தமிழகம்

தமிழகம்

இதனால் மேற்கத்திய காற்று வலுவடைந்து வெப்பச்சலனம் குறைகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பச்சலன பகுதிகளில் மழை பெய்யும். ஆனால் குறைவான மழையே கிடைக்கும். இதனால்தான் காற்றழுத்தம் உருவாவதற்கு முன்பே மழை பெய்கிறது. நன்றாக நினைவில் கொள்ளுங்கள், ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத்தால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகள் தவிர்த்து தமிழகம் முழுவதும் மழை பெய்யாது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilnadu Weatherman says that New low pressure in Bay of Bengal will be formed on May 23. There will be rains for Chennai on May 19- 22.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X