ஆபீஸ் போறதுக்கு முன் ஒரு அப்டேட்! ஒரே ஒரு பிட்டு மேகம் இருக்கு! சென்னையில் மழை தொடரும்- வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அடுத்த ஒரு மணி நேரத்திலிருந்து 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என தமிழநாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Weatherman says that rains to continue in Chennai another 1 to 2 hours

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்துக் கொண்டிருக்கிறது. கிண்டி, பூந்தமல்லி, முகப்பேர், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

தண்ணீர் தேக்கம்: இடியுடன் கூடிய இந்த மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை சென்னைக்கு வர வேண்டிய 17 பன்னாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

திடீர் மழை ஏன்: தமிழகத்தில் கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் இந்த மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையின் தீவிரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது: ஆபீஸ் போறதுக்கு முன்னாடி ஒரு அப்டேட்- எல்லா மேக கூட்டங்களும் கடலில் இருந்து நிலப்பகுதிக்கு நகர்ந்து சென்றுவிட்டது.

1 மண நேரத்தில் மழை: ஆனால் ஒரே ஒரு மேகக் கூட்டம் மட்டும் இருக்கிறது. இதனால் அடுத்த 1 மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்கு சென்னையில் மழை தொடரும். பின்னர் சிறிது ஓய்வுக்கு பிறகு மாநகரத்தின் உள்பகுதிகள், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

Tamilnadu Weatherman says that rains to continue in Chennai another 1 to 2 hours

கத்திபாரா சுரங்கபாதை மூடல்: சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ள தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னை கிண்டியில் கத்திபாரா சுரங்கபாதை மூடப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் அதிகளவில் நீர் தேங்கியுள்ளதால் கார், இரு சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதீப் ஜான் கூறியது என்ன: இந்த மழை குறித்து பிரதீப் ஜான் மேலும் கூறியிருப்பதாவது: தென் சென்னை பகுதிகளில் ஒரே இரவில் இயல்பை விட 3 மடங்கு அளவில் மழை கொட்டித் தீர்த்தது. மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும 2 அல்லது 3 நாட்களுக்கு சென்னையில் மழை தொடரும் என தெரிவித்துள்ளார். அது போல் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+