அழகான காட்சி.. மொத்த தமிழ்நாட்டிற்கு என்ன ஒரு சிறப்பான நாள்.. வெதர்மேன் பிரதீப் சொன்ன குட்நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தீவிர மழை பெய்து வரும் நிலையில் சென்னை மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார்.

Recommended Video

    4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு முழுக்க கடந்த 3 நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அக்டோபர் 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு வங்க கடல் அதனையொட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற்று வருகிறது.

    இது தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் தீவிர கனமழை பெய்து வருகிறது.

    ஆரஞ்ச் அலர்ட்

    ஆரஞ்ச் அலர்ட்

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2 வரை இங்கு அதி தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    பிச்சு எடுக்கும் மழை

    பிச்சு எடுக்கும் மழை

    இதனால் தமிழ்நாட்டில் தற்போது மழை பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கிறது. முக்கியமாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தீவிர கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. சென்னையிலும் நேற்று மாலையில் இருந்து தீவிர கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் சாலையில் நீர் தேங்கி உள்ளது.

    சென்னை மழை

    சென்னை மழை

    இந்த நிலையில் சென்னையின் மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். அவர் செய்துள்ள ட்வீட்டில், கேளம்பாக்கத்தில் தற்போது தீவிர மழை பெய்து கொண்டு இருக்கிறது. மரக்காணம் பகுதியில் 201 மிமி மழை பெய்த நிலையில் தற்போது சென்னையின் தெற்கு பகுதிக்கு மழை நகர்ந்து கொண்டு இருக்கிறது.

    அழகான காட்சி

    அழகான காட்சி

    என்ன ஒரு அழகான காட்சி! மொத்த தமிழ்நாட்டிற்கு என்ன ஒரு சிறப்பான மழை நாள் இது. சென்னையில் தினமும் 30 மிமி மழை பெய்து வருகிறது. இதை விட கூடுதலாகவோ, குறைவாகவோ இனி வரும் நாட்களிலும் மழை பெய்யும்., என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட் செய்துள்ளார். அதாவது சென்னையில் இந்த மழை நிலவரம் இன்னும் நீடிக்கும் என்று கூறியுள்ளார். இதில் நெட்டிசன் ஒருவரின் வீடியோவை அவர் பகிர்ந்து உள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+