புதிய சாதனை.. நாளை மாலையோடு தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கு வேக்சின்.. அமைச்சர் மா.சு பேட்டி!
சென்னை: தமிழ்நாட்டில் நாளை மாலையோடு 1 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டு இருக்கும், புனேவில் இருந்து கூடுதலாக இன்று 3 லட்சத்து 65 ஆயிரம் கோவிட்ஷீல்ட் வேக்சின் டோஸ்கள் வந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வேக்சின் வழங்கும் வேகம் கொஞ்சம் குறைந்து இருக்கிறது. கடந்த வாரங்களில் தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேக்சின் செலுத்தப்பட்டது. ஆனால் போக போக மத்திய அரசு வேக்சின் ஒதுக்குவதில் தாமதம் செய்ததால், தமிழ்நாட்டில் வேக்சின் போடுவது குறைந்தது.
மக்கள் ஆர்வமாக இருந்தாலும், பல்வேறு இடங்களில் வேக்சின் கேம்ப் நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வேக்சின் கையிருப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அமைச்சர் மா. சுப்பிரமணியன் தனது பேட்டியில், தமிழ்நாட்டிற்கு இதுவரை 1 கோடி 2 லட்சத்துக்கு 49 ஆயிரம் வேக்சின் வந்துள்ளது. இதுவரை 97 லட்சம் 65 ஆயிரம் வேக்சின் போடப்பட்டுள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள 85 ஆயிரம் டோஸ் தமிழ்நாடு முழுக்க அனுப்பப்பட்டுள்ளது.

கூடுதல்
இது போக 3 லட்சத்து 65 ஆயிரம் கூடுதலாக வர உள்ளது, தமிழ்நாடு முழுக்க அனுப்பப்படும். நாளை மாலையே தமிழ்நாட்டில் 1 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டு இருக்கும். உலகளாவிய ஒப்பந்தம் இனி தேவையில்லை, எந்த மாநில அரசுகள் விடுத்த உலக அளாவிய ஒப்பந்தத்திற்கு பதில் வரவில்லை.

செங்கல்பட்டு
செங்கல்பட்டு வேக்சின் உற்பத்தி மையத்தை செயல்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் இதற்கான ஆலோசனைகளை செய்து வருகிறோம். மத்திய அரசு இதை நடத்தினால், தமிழ்நாடு அரசு அதற்கு ஆதரவு அளிக்கவும் தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 1299 பேருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளது.

50 ஆயிரம் படுக்கைகள்
கருப்பு பூஞ்சை பரவல் குறைந்து வருகிறது. இறப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் 50 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் அளவு குறைந்து வருகிறது. 50 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன.

தளர்வு
தளர்வு கொடுப்பதால் மக்கள் தேவையின்றி வெளியே செல்ல கூடாது. தளர்வு கொடுத்த கேரளாவில் கேஸ்கள் உயர்ந்துவிட்டது. தேவையின்றி மக்கள் வெளியே சுற்றுவதால் கேஸ்கள் உயரும். கொரோனா 3 அலை வந்தாலும் அதனை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது, என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications