குளிர் அதிகரிக்க போகிறது.. அடுத்த 4 நாட்கள் தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? வானிலை மையம் ரிப்போர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் வரும் நாட்களில் குளிர் அதிகரிக்கும் - சென்னை வானிலை மையம் அடுத்த 4 நாட்களில் வெப்பநிலை குறைந்து குளிர் அதிகரிக்கும்
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்த தாழ்வு பகுதி நாளை ஆழ்ந்த தாழ்வு பகுதியாக உருவெடுக்க உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இந்த தாழ்வு பகுதி உருவாகி இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு எதிர் திசையில் இருப்பதால் பெரிய அளவில் இதனால் தமிழ்நாட்டில் மழை பெய்யாது.

மழை
தமிழ்நாட்டில் ராமநாதபுரத்தில் மட்டுமே இதனால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதை தவிர்த்து மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் வரும் நாட்களில் குளிர் அதிகரிக்கும். அடுத்த 4 நாட்களில் வெப்பநிலை குறைந்து குளிர் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குளிர்
டிசம்பர் மாதம் என்பதால் தமிழ்நாட்டில் குளிர் அதிகரித்து வருகிறது. மழையும் குறைந்துவிட்டதால் கொஞ்சம் கொஞ்சமாக குளிரின் அளவு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதிகாலை நேரத்திலும், இரவு நேரத்திலும் சென்னையிலும், தமிழ்நாட்டின் பல்வேறு உள் மாவட்டங்களில் குளிர் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. வரும் நாட்களில் இந்த குளிர் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு குளிர் வானிலை
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறையும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல் அதற்கு அடுத்த 2 நாட்கள் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும். மொத்தத்தில் 4 நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வாய்ப்பு உள்ளது.

எவ்வளவு
பெரிய அளவில் தமிழ்நாட்டில் எங்கும் மழை பெய்யாது. வறண்ட வானிலைதான் காணப்படும். தமிழ்நாட்டில் வெப்பநிலை 22 டிகிரி செல்ஸியஸ் வரை குறையும் வாய்ப்புகள் உள்ளன. அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியஸ் வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளன என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications