Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழச்சி தங்கபாண்டியன் டிரஸ்.. பின்னாடியே வந்த பாஜக பெண் நிர்வாகி.. இது ஒரு குத்தமா? விளாசிய திமுகவினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதனை பாஜக நிர்வாகி விமர்சிக்கவும், திமுகவினரும், நெட்டிசன்களும், திரண்டு வந்து பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.

முத்திரை பதித்த எத்தனையோ கவிதை தொகுப்புகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன். இலக்கிய உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர்.. ராணி மேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகவும் பணியாற்றியவர்.. அபாரமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, எம்பியாகவும் பதவி வகித்து வருபவர்..

tamizhachi thangapandian, photo and netizens slam bjp woman executive soudamanai

கடினமான சூழல்கள்: பெண்கள் மீதான வன்முறை மட்டுமல்லாமல், சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்து வருபவர்.. தன்னுடைய சொந்த வாழ்க்கையில், கடினமான சூழல்களை கடந்து வந்தது எவ்வாறு என்பது குறித்தும் நிறைய பேட்டிகளில் வெளிப்படையாகவே சொல்லி, சோர்ந்து போகும் இளம் பெண்களுக்கு உத்வேகம் தந்து வருபவர்.

"திருமண பலாத்காரம் நம் நாட்டில் இன்னுமும் குற்றமாக்கப்படவில்லை. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களுக்கெல்லாம் தீர்வு காண்பதற்கு, சுகாதார அமைப்பில் உள்ள விரிசல்களை நோக்கி நமது கவனம் சமமாக திரும்ப வேண்டும்.. சமத்துவம் மற்றும் மனித கண்ணியம் ஆகியவைதான் ஜனநாயகத்தின் அடிப்படை கூறு என்று சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிலும் பதிவு செய்திருந்தார் தமிழச்சி தங்கபாண்டியன். பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்த இவருக்கு, ஏகப்பட்ட சாதனை வரலாறுகள் உள்ளன.

சௌதாமணி: இந்நிலையில், இவரது ஒரு போட்டோ, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த போட்டோவில், தமிழச்சி தங்கபாண்டியன் டீ ஷர்ட், பேண்ட் அணிந்துள்ளார்.. இதை போட்டோவை, தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், ஊடக பிரிவின் மாநில செயலாளருமான சௌதா மணி தன்னுடைய ட்வீட்டில் பகிர்ந்துள்ளார். அத்துடன், "என் உடை என் உரிமை" என்று மறைமுகமாக கிண்டலத்து விமர்சித்துள்ளார்.

பாஜக நிர்வாகி சௌதா மணி இப்படி விமர்சிக்கவும், அவரை நெட்டிசன்கள் திரண்டு வந்து விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்..உண்மைதானே? நீங்கள் கிண்டலாக சொன்னாலும், அவரவர் ஆடை அவரவர் உரிமைதான்.. அப்படியென்ன இந்த ஆடையில் நீங்கள் குற்றம் கண்டு பிடித்துள்ளீர்கள்? என்றெல்லாம் சவுதாமணியை கேள்வி கேட்டு வருகிறார்கள்.. மேலும் சிலர், "எங்கேயும் எப்போதும் பெண்களை துரத்தும் ஆடைக் கட்டுப்பாடு, இப்போதும் அடங்கவில்லையே".. என்று கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்..

tamizhachi thangapandian, photo and netizens slam bjp woman executive soudamanai

மல்லிப்பூ: மேலும் சிலர், தமிழச்சி தங்கபாண்டியன் என்றாலே, பட்டுப்புடவை, தலைநிறைய மல்லிப்பூ, முகம்நிறைய புன்னகை என்றுதான் அனைவர் மனக்கண் முன்பும் வந்துநிற்கும் தோற்றமாகும்.. திடீரென மார்டன் டிரஸ் அணிந்துள்ளது, புதுமையாக உள்ளது என்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+