மின்வாரியம் மீண்டும் சர்ப்ரைஸ்.. உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? ரூல்ஸ் முழுசா மாறிடுச்சு.. சூப்பர்ல
சென்னை: தமிழக மின்சார வாரியம், இன்னொரு சர்ப்ரைஸ் தந்துள்ளது.. மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், மின்வாரியம் முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கையானது, பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்து கொண்டிருக்கிறது.
தமிழக மக்களின் பயன்பாட்டுக்காக, தேவைகளுக்காக, அவர்களின் வசதிக்காக மின்சார வாரியம் ஏராளமான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. வீடுகளில் கரண்ட் பில் கணக்கெடுக்கப்பட்டதுமே, நுகர்வோருக்கு மெசேஜ் வந்துவிடும் அளவுக்கு தொழில்நுட்பத்தை புகுத்தி வருகிறது. இதற்காகவே, 'TANGEDCO' என்ற ஆப்பையும் அமல்படுத்தி வருகிறது.

மின்கம்பிகள்: அதேபோல, வாடிக்கையாளர்கள், மின் தடை, மீட்டர் பழுது, மின் கட்டணம், மின்னழுத்த பிரச்சனை, சேதமடைந்த மின் கம்பம், மின் திருட்டு, மின் கம்பி அறுந்தது, தீ விபத்து தொடர்பான புகார்கள் என்றாலும், இந்த செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதுபோலவே, வாடிக்கையாளர்களின் தேவைகள், புகார்களை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் மின்துறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. முக்கியமாக தற்போது மழைக்காலம் துவங்கிவிட்டதால், அனைத்து அதிகாரிகளும் தங்களின் செல்போனை எந்த காரணம் கொண்டும், ஆப் செய்து வைக்கக்கூடாது என்றும் இதை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்..
மின்சார பணிகள்: அதுமட்டுமல்ல, மழை காலங்களில் தகவல் தொடர்பில் தொய்வு ஏற்படாமல், மின்சார பணிகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ள, வாக்கி டாக்கி இயந்திரங்களை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், மற்றொரு அதிரடியை மின்சார வாரியம் கையில் எடுத்துள்ளது.. அதாவது, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.. இங்கு 94987 94987 என்ற எண்ணில் மின் தடை உள்ளிட்ட தங்களது புகார்களை நுகர்வோர்கள் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். இதற்காகவே 60 ஊழியர்கள் 3 ஷிப்டுகளில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
மழை ஆரம்பம்: தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டதால், மின் சாதன பழுதால், மின் தடை உள்ளிட்ட பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின்னகத்தில் விரைவாக புகார்களைப் பெறவும், அவற்றின் மீது விரைவாக தீர்வு காணவும், மின் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மக்களின் புகார்களை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தெரிவிப்பதற்கான கால அவகாசம், 20 வினாடியில் இருந்து, 10 வினாடியாக குறைக்கப்பட்டிருக்கிறதாம்.. அதாவது, வாடிக்கையாளர் மின்னகத்தில் புகார் தந்தால், மைய ஊழியர் அதை கணினியில் பதிவுசெய்து கொண்டு, சம்பந்தப்பட்ட உதவி பொறியாளரின் செல்போன் மெசேஜ் மூலம் புகார் விபரங்களையும், புகார் தருவோரின் செல்போன் நம்பரையும் புகார் பதிவு செய்யப்பட்ட விவரத்தையும் அனுப்பி வைத்துவிடுவார்.
சபாஷ் திட்டம்: இந்த பணிக்கு 20 வினாடிகள் ஆகின்றன. இதுதான் தற்போது 10 வினாடியாக குறைக்கப்பட்டிருக்கிறதாம்.. இதற்காக கூடுதலாக 10 ஊழியர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, மின்னகத்துக்கு புகார்களை தரும் நுகர்வோர்கள், நீண்ட நேரம் போனில் காத்திருக்க தேவையில்லை.. விரைவாக இணைப்பு கிடைத்துவிடும் என்று உறுதியுடன் கூறுகிறார்கள் அதிகாரிகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications