சட்டென சொன்ன மின்வாரியம்.. கரண்ட் பில் ரீடிங்கில் திடீர் மாற்றம்.. என்ன சொல்கிறது தமிழக மின்வாரியம்
சென்னை: ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி விரைவில் துவங்கப்படும் என்றும், அதுகுறித்த டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், அதுகுறித்த காரணங்கள் என்னென்ன என்று தற்போது தெரியவந்துள்ளது
சமீபகாலமாக, மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் குளறுபடிகள் நடப்பதாகவும், பல இடங்களில் கணக்கெடுப்பு பணியில் தாமதம் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
2 மாதத்தையும் தாண்டி கணக்கெடுக்கப்படுவதால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதாயிருக்கிறது என்ற புகார்களும் வெடித்தன. அதனால்தான், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழக அரசு வேகப்படுத்தியது.

ஸ்மார்ட் மீட்டர்: இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் கீழ் மீட்டரில் மின் பயன்பாடு தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.. பிறகு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக "சர்வர்" உடன் இணைக்கப்படும். இதனால் மின் பயன்பாட்டை தானாகவே ஸ்மார்ட்' மீட்டர் கணக்கெடுத்துவிடும். அதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்க வேண்டியதில்லை.. கட்டண விவரமும் SMS மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும்.
வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் போன் கூட செய்ய தேவையில்லை. அதை மின்வாரிய அலுவலகத்தில் இருந்தபடியே தெரிந்து கொள்ள முடியும். இது போன்றவை ஸ்மார்ட் மீட்டர் மூலமாக கிடைக்கும் நன்மைகளாகும்.
Tangedco: வரும் 2025ம் ஆண்டுக்குள் அனைத்து வீடு, வணிக இடங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.. இதனிடையே கடந்த மாதம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு நுகர்வோருக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணியை விரைவில் தொடங்கவுள்ளதாகவும், மாநிலம் முழுதும், 1, 2, 3 ஆகிய தொகுப்புகளாக மேற்கொள்ள போவதாகவும் கூறியிருந்தது.
முதல் கட்டமாக, மேற்கு மாவட்டங்களில், 1.02 கோடி ஸ்மார்ட் மீட்டர்களும், தென் மாவட்டங்களில், தென் மாவட்டங்களில், 80 லட்சம் மீட்டர்களும் பொருத்த, கடந்த மாதம் ஜுனின் துவக்கத்தில் டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்க, கடந்த 5ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. பிறகு, டெண்டர் கடைசி தேதி, மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
திடீர் ரத்து: அதாவது, 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், இந்த ஆண்டே தொடங்கப்பட்டு, வரும் மார்ச் 2025க்குள் முடிக்கப்பட உள்ளதாக காலநிர்ணயமும் செய்யப்பட்டிருக்கிறது.. இந்நிலையில், டெண்டரை திடீரென ரத்து செய்து, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு இதுகுறித்து நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதாவது, "டெண்டர் விளக்க கூட்டத்தில் பங்கேற்ற, 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 265 சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றன. அதற்கேற்ப, டெண்டர் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதனால், நிறுவனங்கள் கேட்கும் விபரங்கள் இடம்பெறுவதுடன், 3 தொகுப்புகளுக்கும் ஒன்றாக சேர்த்து, புதிய, டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டுள்ளதால், தற்சமயம், இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று மின்வாரியம் தரப்பில் சொல்லப்படுகிறதாம்.
குறைபாடுகள்: இந்நிலையில், அதுகுறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் சொல்லும்போது, "கடந்த அதிமுக ஆட்சியின்போது பரீட்சார்த்த அடிப்படையில் சென்னை தியாகராயநகர் பகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது. இதில் உள்ள பல்வேறு குறைபாடுகளை சரி செய்து, தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த டெண்டர் கோரப்பட்டது.
இந்த டெண்டர் அறிவிப்பில் எதிர்காலத்தில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் இருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மின்வாரியத்தின் பல நிபந்தனைகள் நிறைவேற்ற முடியாத வகையில் இருப்பதால்தான், டெண்டர் கோர நிறுவனங்கள் முன்வரவில்லை.
எனவே, 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அழைத்து டெண்டர் கோருவதில் இருந்து வரும் சிக்கல்கள் என்னென்ன என்பதை மின்வாரியம் கேட்டறிந்தது. அப்போது இந்த நிறுவனங்களின் தரப்பில் மொத்தம் 265 சந்தேகங்கள் எழுப்பப்பட்டு, அவைகளுக்கு தீர்வு காண வேண்டுமென வேண்டுகோள் விடுத்தன.
மின்வாரியம்: அதன்படி, நிறுவனங்களின் சந்தேகங்களை சரிசெய்து, அவற்றில் பலவற்றை ஏற்றுக்கொள்ள மின்வாரியம் முடிவு செய்தது.. இதற்காக திருத்தப்பட்ட டெண்டரை வெளியிடுவதற்கு பதிலாக, அத்தனை சந்தேகங்களுக்கான தீர்வுகளுடன் புதிய டெண்டரை வெளியிடும் வகையில், ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.. அதேபோல, 3 தொகுப்புகளாக நடைபெற இருந்த பணியை ஒரே தொகுப்பாக சேர்த்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே புதிய டெண்டர் விரைவில் வெளியாகும்" என்கிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications