இபி பில் கட்ட போறீங்களா.. ரொம்ப கவனம்! திடீரென தமிழக மின்சார வாரியம் போட்ட உத்தரவு.. என்னங்க இது?
சென்னை: தமிழ்நாட்டில் வாட்ஸ் ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மின்சார வாரியம் விடுத்துள்ளது. இபி பில் செலுத்துவதில் நடக்கும் மோசடி ஒன்றை பற்றி எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது மின்சார கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது.

1. பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ் ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
2. மின் கட்டணம் 500 தாண்டும் பட்சத்தில் தானாக பதிவு செய்யப்பட்ட போன் எண்களின் வாட்ஸ் ஆப்களுக்கு பில் சென்றுவிடும்.
3. அப்படி இல்லாத பட்சத்தில் வாட்ஸ்ஆப்பில் TANGEDCO இலச்சினை மற்றும் பச்சை ✅ குறியீடு இருக்கும்.
4. எண் 94987 94987 என்பதை உறுதி செய்து அதில் கட்டணம் செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட எண்ணில் இதற்கு மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் என்ற ஆப்ஷன் வரும். அதில் கிளிக் செய்தால் நம்முடைய கட்டணம் காட்டும்.
இந்த பில் கட்டணத்தில் க்யூ ஆர் கோடு இருக்கும். இந்த க்யூ ஆர் கோடை கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ சாதனங்களில் ஸ்கேன் செய்தால் போதும் தானாக அதன் மூலம் பணம் செலுத்திவிட முடியும்.
எச்சரிக்கை: ஆனால் அதே சமயம் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மின்சார வாரியம் விடுத்துள்ளது. இபி பில் செலுத்துவதில் நடக்கும் மோசடி ஒன்றை பற்றி எச்சரித்துள்ளது. tangedcoவின் athikaarapoorva பக்கம் தவிர வேறு மெசேஜ் மூலம் வர கூடிய லிங்கை கிளிக் செய்து பணம் செலுத்த கூடாது. சில மோசடியாளர்கள் இபி பில் கட்டுங்கள் என்று உங்களுக்கு மோசடி லிங்கை அனுப்பி பணம் வசூலிக்க வாய்ப்புள்ளது என்று இபி எச்சரித்துள்ளது.
யாருக்கு பொருந்தும்; இதில் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்கு மேலே உள்ள நுகர்வோர்களுக்கு யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்த முடியும். தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் அளிக்க கூடிய முக்கியமான அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது.
எச்சரிக்கை: இந்த நிலையில்தான் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மின்சார வாரியம் விடுத்துள்ளது.
அதில், தற்போது,மீட்டர் ரீடிங் எடுத்தவுடன், 500 யூனிட் மேல் உள்ளவர்களுக்கு, முதல் படியாக, மின்கட்டண லிங்க், வாட்ஸ்அப் (Push) செய்தியாக அனுப்பப்படுகிறது. நுகர்வோரின் வரவேற்பை பொறுத்து மேம்படுத்தப்படும். எனவே, மின்வாரிய அதிகாரபூர்வ வாட்ஸ்அப் எண்ணில் Hi என்று ' பேச ' முயற்சிக்க வேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம், என்று கூறியுள்ளது.
இனி தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை வழங்க அதிகபட்சம் 3 நாட்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இனி டு, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கே கூடுதல் மின் சாதனங்களான சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களில் மின்சாரம் தர வேண்டும். இல்லையென்றால் 7 நாட்களில் மின்சாரம் தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி வெளியான அறிவிப்பு இந்த மாதம் நடைமுறைக்கு வருகிறது,
புதிய முறை; இது போக மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கு (UG) வசூலிக்கப்படும் அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படி புகார்கள்; எழுந்ததையடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) உடனடியாக அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் கணக்கில் அதைத் திருப்பிச் செலுத்தி அவர்களின் அடுத்தடுத்த பில்களுடன் சரிசெய்துகொள்ளவும் என்று உத்தரவிட்டுள்ளது மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் மின்கட்டணம் குறைவாகவும், நிலத்தடி கேபிள்களுக்கு (UG) அதிக மேம்பாட்டு கட்டணமும் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இதற்காக பயன்படுத்தத்ப்படும் மென்பொருளானது உடனடியாக திருத்தப்பட வேண்டும், மேலும் தற்போதுள்ள ஏற்பாடுகளுடன் மேம்பாட்டுக் கட்டணங்களை மேலும் வசூலிக்க அனுமதிக்கப்படாது. இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள கூடுதல் மேம்பாட்டுக் கட்டணங்கள் விண்ணப்பதாரர்கள் அல்லது நுகர்வோருக்கு உடனடியாகத் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது முன்கூட்டியே நுகர்வுக் கட்டணமாகக் கருதி ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையம் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இனிமேல் மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கான (UG) அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்பட கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இபி பில்; இது போக சென்னை மட்டுமின்றி அடுத்த சில வாரங்களில் தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்கட்டண முறையில் மாற்றம் ஏற்படும் என்று தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் மின் கட்டண முறையில் முக்கியமான சில மாற்றங்களை வரும் நாட்களில் நாம் எதிர்பார்க்கலாம் என்று மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications