சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக மின்வாரிய ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு.. அரசாணை வெளியீடு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு ஊழியர்களைப் போல தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக (TANGEDCO) ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரை தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு 59ஆக உயர்த்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதனால் செலவுகளைக் குறைக்க ஓய்வூதிய பலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

TANGEDCO employees retirement age raised to 60

பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில் மத்திய அரசு ஊழியர்களைப் போலவே தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59இல் இருந்து 60ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது

தமிழகத்தில் 21 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு.. கூடுதல் கட்டுப்பாடுகள் பலன் தருமா?தமிழகத்தில் 21 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு.. கூடுதல் கட்டுப்பாடுகள் பலன் தருமா?

இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களைப் போலவே TANGEDCO எனப்படும் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதும் தற்போது 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாரணையும் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இதனால் இந்த ஆண்டு ஓய்வு பெற வேண்டிய தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் மேலும் ஓர் ஆண்டு பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

English summary
TANGEDCO latest announcement about retirement age
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X