Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டென சொன்ன மின்சார வாரியம்.. புதுசா முளைத்த 2 மேட்டர்கள்.. என்ன செய்ய போகிறது தமிழ்நாடு அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவது தொடர்பாக 2 விதமான சிக்கல்கள் எழுந்த நிலையில், அதுகுறித்து தமிழக அரசு கையில் எடுக்க போகும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.

சமீபகாலமாக, மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் குளறுபடிகள் நடப்பதாகவும், பல இடங்களில் கணக்கெடுப்பு பணியில் தாமதம் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

TANGEDCO huge announcement and What are the 2 problems with smart meter scheme

ஸ்மார்ட் மீட்டர்: 2 மாதத்தையும் தாண்டி கணக்கெடுக்கப்படுவதால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதாயிருக்கிறது என்ற புகார்களும் வெடித்தன. அதனால்தான், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழக அரசு முன்னிலைப்படுத்தியது. இதனால், மின் பயன்பாட்டை தானாகவே ஸ்மார்ட் மீட்டர் கணக்கெடுத்துவிடும். அதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்க வேண்டியதில்லை.. கட்டண விவரமும் SMS மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும்.

இதற்காக தமிழக அரசு 2 மாதங்களுக்கு, முதல் கட்டமாக, மேற்கு மாவட்டங்களில், 1.02 கோடி ஸ்மார்ட் மீட்டர்களும், தென் மாவட்டங்களில், 80 லட்சம் மீட்டர்களும் பொருத்த, கடந்த ஜூன் மாத துவக்கத்தில் டெண்டர் கோரப்பட்டது. ஆனால், 15 நாட்களுக்கு முன்பு, டெண்டரை திடீரென ரத்து செய்து, மின்வாரியம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த ஜுன் மாதம் டெண்டர் கோரப்பட்டதில், 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 265 சந்தேகங்களை எழுப்பியதையடுத்து, அந்த டெண்டரை ரத்து செய்த மின்வாரியம், இப்போது புதிய டெண்டரை கோரியுள்ளதாம். இந்த வருடம் இறுதிக்குள் இந்த டெண்டர் 4 தொகுப்புகளாக, ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து இணைப்புகளிலும் பொருத்த, 3.03 கோடி ஸ்மார்ட் மீட்டர் வாங்க கோரப்பட்டுள்ளது.

புதிய டெண்டர்: டெண்டரில் தேர்வாகும் நிறுவனம், மீட்டர்களை பொருத்துவது, தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்துவது, ஒருங்கிணைப்பது, பராமரிப்பது என்று மொத்த பணிகளையும், 10 வருடங்களுக்கு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. அநேகமாக இந்த வருட இறுதிக்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி துவங்கப்படும் என்கிறார்கள்..

புதிய டெண்டரை கோருவதற்கு என்ன காரணம்? கடந்த அதிமுக ஆட்சியின்போது பரீட்சார்த்த அடிப்படையில் சென்னை தியாகராயநகர் பகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது. இதில் உள்ள பல்வேறு குறைபாடுகளை சரி செய்து, தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த டெண்டர் கோரப்பட்டது.

அதிமுக அரசு: ஆனால், இந்த டெண்டர் அறிவிப்பில், எதிர்காலத்தில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் இருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது.. அதனால்தான், மின்வாரியத்தின் பல நிபந்தனைகள் நிறைவேற்ற முடியாத வகையில் இருப்பதால், டெண்டர் கோர எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை.

அதனாலேயே, கடந்த ஜூன் மாதம், 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அழைத்து டெண்டர் கோருவதில் இருந்து வரும் சிக்கல்கள் என்னென்ன என்பதை மின்வாரியம் கேட்டறிந்தது. அப்போது மொத்தம் 265 சந்தேகங்கள் எழுப்பப்பட்டு, அவைகளுக்கு தீர்வு காண வேண்டுமென வேண்டுகோளையும் விடுத்திருந்தன.

என்ன காரணம்: எனவே, நிறுவனங்கள் கேட்கும் விபரங்கள் இடம்பெறுவதுடன், 3 தொகுப்புகளுக்கும் ஒன்றாக சேர்த்து, புதிய, டெண்டர் கோரவும் முடிவு செய்யப்பட நேர்ந்தது. எப்போது வேண்டுமானாலும், புதிய டெண்டர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில்தான், புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுக்க முடியும். கணக்கெடுப்பில் தவறுகள் தடுக்கப்படும் என்றாலும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு, மினவாரிய ஊழியர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் இருப்பதாக அடுத்த சிக்கல் கிளம்பி உள்ளது.

ஆனாலும், மாற்று வேலையை அவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசும் நம்பிக்கை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மின்மீட்டர் திட்டத்தினால் தமிழ்நாடு மின்வாரியத்தில் 15,000 பேர் வரையில் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மின்வாரிய ஊழியர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்கள்.

TANGEDCO huge announcement and What are the 2 problems with smart meter scheme

சிக்கல்கள்: ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால், தங்களது வேலைக்கான உத்தரவாதத்தை மின்வாரியமோ, அரசோ இதுவரை அளிக்கவில்லை. மேலும், நிதிச்சூழல் சரியில்லாத நேரத்தில், ஸ்மார்ட் மீட்டருக்காக அரசு பெருமளவில் செலவு செய்வது பல கேள்விகளை எழுப்புவதாகவும் ஊழியர்கள் தரப்பு சந்தேகத்தை கிளப்புகிறது. இதே பிரச்சனை கேரளாவிலும் எழுந்துள்ள நிலையில், மின் ஊழியர்களுக்கு வேலை உத்தரவாதத்தை அம்மாநில அரசு தந்துள்ளது.

அதுபோலவே தங்களுக்கும் வேலை உத்தரவாதத்தை தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வெடித்து கிளம்பி உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தினால், மின்வாரிய ஊழியர்களுக்கு, மாற்று வேலை வழங்குவது குறித்து வாரியம் பரிசீலிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தரப்பட்டாலும், புதிய டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், ஊழியர்களை எப்படி தமிழக அரசு சமாளிக்க போகிறது? என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+