“அரசு எங்களை ஏமாத்திருச்சு..” தேர்தல் நேரத்தில் போராட்டத்தை கையில் எடுக்கும் டாஸ்மாக் பணியாளர்கள்!
சென்னை: டாஸ்மாக் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொண்ட விஷயங்களை அறிவிக்காமல், ஊதிய உயர்வு 1,000 ரூபாய் என்ற ஒரு அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்துள்ளனர்.
தமிழக அரசு பல்வேறு துறை சார்ந்த ஊழியர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரூ.1,000 சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து மார்ச் 7ஆம் தேதி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்ட நடவடிக்கை குழு அறிவித்திருக்கிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்த நிலையில் ரூபாய் 1000 ஊதிய உயர்வு அறிவிப்பு மட்டும் வெளியாகி இருப்பதால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர், டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்ட நடவடிக்கை குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எடுக்கப்பட்ட சில முடிவுகள் குறித்து அறிவிப்பு செய்யாமல் இருப்பதை டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்ட நடவடிக்கை குழு வன்மையாக கண்டித்து வந்தது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு வலியுறுத்தி மார்ச் 7ஆம் தேதி டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தனசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "டாஸ்மாக் பணியாளர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தியது. அப்போது, 18, 19 ஆகிய இரண்டு தேதிகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் ஒப்புக்கொண்ட விஷயங்களை அறிக்கையில் வெளியிடாமல், ஊதிய உயர்வு 1,000 ரூபாய் என்ற ஒரு அறிவிப்பு மட்டும் இடம்பெற்றிருந்தது.
இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ள டாஸ்மாக் பணியாளர்கள் அரசின் மீது நம்பிக்கையற்ற தன்மையோடு இருக்கிறார்கள். எனவே எங்களுடைய கோரிக்கையை மறுபரிசீலனை செய்து, ஒப்புக்கொண்டபடி மாற்று அறிக்கையை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 7 ஆம் தேதி மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு, எங்களுடைய போராட்டக் குழு மீண்டும் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளோம்.
அதன்படி காலவரையற்ற போராட்டத்தை மீண்டும் துவங்க இருக்கிறோம். அரசு ஒருவேளை எங்களுடைய கோரிக்கையை பரிசீலிக்காவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இடைக்கால ஊதிய உயர்வாக ரூ. 5,000 கேட்டிருந்தபோதிலும், வெறும் ரூ.1000 தான் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் ஏப்ரல் மாதம் முதல் என்று சொல்லியிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.
எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என்று கூறியிருந்தனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில் குழு என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துதல் ஆகியவைதான் எங்களுடைய பிரதான கோரிக்கை.
கடந்த முறை அரசு அளித்த வாக்குறுதியை நம்பித்தான் நாங்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டோம். ஆனால் அரசு எங்களை ஏமாற்றி இருக்கிறது என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக புரிந்துகொண்டோம்" எனக் கூறியுள்ளார்.
அவரிடம் எத்தனை நாட்களுக்குள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டதற்கு, "இப்போது நாட்கள் குறைவாகவே இருக்கிறது. அநேகமாக 10ஆம் தேதி தேர்தல் சம்பந்தமான அறிக்கை வெளியிட வாய்ப்பு இருக்கிறது. எனவே அதற்கு முன்பாகவே எங்களை அழைத்து பேசி, ஏற்கனவே ஒப்புக்கொண்டதை அறிக்கையாக வெளியிட வேண்டும்" என்றார்.
-
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications