டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அரியர்ஸுடன் வரும் ஊதிய உயர்வு
சென்னை: மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கான நிலுவைத் தொகையுடன் கூடி, 2 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு வழங்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரத்து 787 கடைகள் மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகளில் 6 ஆயிரத்து 567 மேற்பார்வையாளர்கள், 14 ஆயிரத்து 636 விற்பனையாளர்கள் மற்றும் 2 ஆயிரத்து 426 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 23 ஆயிரத்து 500 பேர் பணியாற்றி வருகின்றனர்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் ஊதிய ஊயர்வு வழங்கப்படும் என்று துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்தார். இதன் காரணமாக ஆண்டுக்கு ரூ. 64.08 கோடி கூடுதல் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி டாஸ்மாக் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த சம்பள உயர்வுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அந்த வகையில், அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வாக ஆயிரம் ரூபாயும், ஊழியரின் வேலை, நடவடிக்கையைப் பொறுத்து ஊக்கத் தொகையும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு அவர்கள் பெற்று வரும் தொகுப்பூதியத்துடன் மாதம்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்க அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது அறிவிப்பில், 'டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அந்த வகையில், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
மேலும், மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்து விதி மீறலில் ஈடுபட்ட 451 ஊழியர்களுக்கு ரூ.1,000 ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் மாதம் முதல் முன் தேதியிட்டு இரண்டு நாட்களுக்குள் வழங்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications