அல்டிமேட் டாஸ்மாக்.. ஓட்டு போட்டுட்டு அதெப்படி முடியும்? விழிக்கும் குடிமகன்கள்.. தமிழக அரசு முடிவு?
சென்னை: டாஸ்மாக் ஊழியர்கள் மிக முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள்.. இது குறித்த தகவலானது, குடிமகன்களுக்கு கலக்கத்தை தந்து கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?
இந்த வருடம் 2024, ஜனவரி மாதம் மட்டும் மொத்தம் 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.. பிப்ரவரி மாதத்தில், ஒரே ஒருநாள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பு: இந்த மார்ச் மாதம் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை முடிந்துள்ளது.. அதுபோலவே, ஏப்ரல் மாதங்களில் 4 நாட்கள் விடுமுறை வரப்போகிறது.. அதாவது, 10 ஏப்ரல், புதன்கிழமை - ஈத்-அல்-ப்தர் 14 ஏப்ரல், சனிக்கிழமை - அம்பேத்கர் ஜெயந்தி 17 ஏப்ரல், புதன்கிழமை - ராம நவமி 21 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், விரைவில் தேர்தல் நடக்க உள்ளதால், அதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது.
பிரச்சாரம்: அதாவது, வருகிற ஏப்ரல் 19ல் தேர்தல் நடக்கிறது. எனவே, ஏப்ரல் 17ம் தேதி மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.. அன்று மாலை 6:00 மணியுடன் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அதன்பிறகு, 18 மற்றும் 19ம் தேதிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 17ம் தேதியும் முழு விடுமுறை விட உத்தரவிடுமாறு உள்துறை செயலருக்கு, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, உள்துறை செயலருக்கு, கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார்கள். அந்த கடிதத்தில் உள்ளதாவது:
மதுக்கடைகள்: தேர்தலுக்காக ஏப்ரல் 17ம் தேதி மாலை, 6:00 மணிக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவு வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரியவருகிறது. இவ்வாறு மூடப்படும்போது, மதுக்கடைகளில் கூட்டம் அளவுக்கு அதிகமாக கூடும். ஊழியர்களின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், கடைகளை மூடியபின், கணக்கு பார்க்க இயலாத நிலை ஏற்படும். இதனால், 17ம் தேதி அன்று முழு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். அதேபோல், டாஸ்மாக் ஊழியர்கள் ஓட்டளித்து விட்டு, 19ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு மேல் கடைகளை திறக்க இயலாத நிலை ஏற்படும். இதனால், 19ம் தேதியும் முழு விடுமுறை அறிவிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன முடிவு: வாக்களித்துவிட்டு, அன்றைய தினமே எப்படி கடைகளை திறக்க முடியும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் கேட்டிருப்பதால், அன்றைய தினமும் விடுமுறை கேட்டுள்ளதற்கு தமிழக அரசு என்ன முடிவெடுக்க போகிறதென்று தெரியவில்லை.. ஆனால் 3 நாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுவிடுமா? என்ற கலங்கி போயுள்ளார்களாம் குடிமகன்கள்.












Click it and Unblock the Notifications