குடிமகன்களால் '45000 கோடி'... 3ல் ஒரு பங்கு டாஸ்மாக்கால் தான் அரசுக்கு வருமானமா? விவரம் என்ன?
தமிழ்நாட்டில் கடந்த நிதி ஆண்டு டாஸ்மாக் வருமானம் 45000 கோடியாக இருந்தது. வரும் ஆண்டு 50 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த நிதி ஆண்டு டாஸ்மாக் வருமானம் 45000 கோடியாக இருந்தது. வரும் ஆண்டு 50 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 2023-24ம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ.1,81,182.22 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் ரூ.50,000 கோடி மது வணிகத்தின் மூலமாக கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 20ம் தேதி இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதை எடுத்துரைத்தார்.அதேபோல் அரசுக்கு வரி வருவாய் எவ்வளவு என்பது குறித்தும், கடன்கள் குறித்தும், செலவினங்கள் குறித்து விரிவாக பேசினார். மேலும் அரசின் வரி வருவாய் எப்படி உயர்த்தப்படும் என்பது குறித்தும் நிதியமைச்சர் பேசினார்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்திற்கு பிறகு நிதித்துறை செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ரூ.45 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்தது. மேலும் வரும் நிதியாண்டில் அது ரூ.50 ஆயிரம் கோடியாக இருக்கும்" என்றார்.

டாஸ்மாக் வருமானம்
2023-24ம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ.1,81,182.22 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் ரூ.50,000 கோடி மது வணிகத்தின் மூலமாக கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சொந்த வருவாய் வரி வருவாய் என்று பார்த்ததால் 3ல் ஒரு பங்கு வருமானம் டாஸ்மாக் மூலமே அரசுக்கு கிடைக்கும் என்பது தெரிகிறது. அதாவது தமிழ்நாடு அரசுக்கு வருவாய் அளிக்கும் முக்கிய கருவியாக டாஸ்மாக் திகழ்கிறது.

இந்த ஆண்டு எவ்வளவு
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 5,300 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் வருமானமே அரசின் முக்கிய வருமான உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு 15 ஆயிரம் கோடியாக இருந்த வருமானம், அப்படியே இரு மடங்காகி 30 ஆயிரம் கோடியாக மாறியது. தற்போது அந்த வருமானம் 45 ஆயிரம் கோடி என்கிற அளவிற்கு உயர்ந்துள்ளது. வரும் ஆண்டில் 50 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மதுவிற்பனை இலக்கு
பிரபல பத்திரிக்கையாளர்கள் கூறும் போது, சாதாரண நாட்களை தவிர்த்து பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை போன்ற நாட்களில் டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடுதான் மதுவிற்பனை அதிகரிப்பு. கடந்த நிதியாண்டில் தீபாவளியையொட்டி 2 நாட்களில் ரூ.464.21 கோடியும், புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறையில் தலா ஆயிரம் கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது. கடந்தாண்டு மார்ச் மாதத்தில் மதுபானங்களின் விலை சற்று உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் விலை உயர்த்தப்படவில்லை. டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனையும், வருமானமும் அதிகரித்து வருகிறது என்றார்கள்.

ஒரு லட்சம் ரூபாய்
இதனிடையே தமிழக அரசு நடப்பாண்டில் ரூ.1,43,197 கோடி மொத்தக் கடன் வாங்க முடிவு செய்திருக்கிறது. அதையும் சேர்த்தால், தமிழகத்தின் மொத்தக்கடன் ரூ.7,26,028 கோடியாக உயரும். அதாவது ஒவ்வொருவர் பெயரிலும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் கடன் இருக்கும் என்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் இது ஒன்றரை லட்சம் ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications