ரூ.3,50,00,00,000.. டாஸ்மாக்கில் நேற்றைய விற்பனை எவ்வளவு தெரியுமா? 3 நாள் லீவால் போட்டா போட்டி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இன்று, நாளை, நாளை மறுநாள் என்று மொத்தம் 3 நாட்கள் டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நேற்று ஒரே நாளில் தீபாவளி, பொங்கல் பண்டிகையைபோல் டாஸ்மாக்கில் விற்பனை பல நூறு கோடிகளை தாண்டி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து நாளை மறுநாள் (ஏப்ரல் 23) தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று, நாளை மற்றும் தேர்தல் நடக்கும் நாளான ஏப்ரல் 23 என 3 நாட்களுக்கு டாஸ்மாக்கிற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் மதுபானம் குடித்து பிரச்சனைகள் வரலாம் என்பதால் முன்கூட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு மதுபானம் வழங்குவதை தடுக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக் 3 நாட்கள் விடுமுறை என்பதை முன்கூட்டியே அறிந்தவர்கள் மதுபானத்தை போட்டிப்போட்டு கூடுதலாக வாங்கி வைத்து கொண்டனர்.
அந்த வகையில் நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் மொத்தம் ரூ.350 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் ஒரே நாளில் வழக்கத்தை விட பலமடங்கு வரை மதுபானம் விற்பனை அதிகரிக்கும். அதேபோல் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக்கில் விற்பனை ரூ.350 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
இதில் வருத்தம் என்னவென்றால் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை இல்லாமல் சாதாரண நாளில் அதிகளவில் டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனையாகி இருப்பது நேற்றைய தினத்தில் தான். இதனால் தான் சமூக ஆர்வலர்கள் கவலையில் உறைந்துள்ளனர்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications