டாஸ்மாக் கடைகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை.. தமிழகம் முழுவதும் மது விற்பனை கிடையாது!
சென்னை: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது டாஸ்மாக் நிறுவனம். வரும் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள், மதுபான பார்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறையையொட்டிய நாளில் மதுபானக் கடைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் 2,919 மது அருந்தும் பார்கள் உள்ளன. இதன் காரணமாக டாஸ்மாக் மதுக் கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.110 கோடிக்கும், வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கு அதிகமாகவும் மது விற்பனை நடைபெறுகிறது.

ஆண்டுக்கு குறைந்தபட்சம் 8 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வள்ளலார் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்தநாள், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில் விடுமுறை விடப்படும். மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிலாதுன் நபி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாமல் பார்கள், மதுபான விடுதிகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் எந்தக் கடையும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி, தடையை மீறி மது பாட்டில்களை பதுக்கி வைப்பது அல்லது கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications