திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்.. தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுமுறை - டாஸ்மாக் கடைகள் மூடல்
சென்னை: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுவதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்செந்தூரே விழாக்கோலம் பூண்டுள்ளது.
அறுபடை வீடுகளில் 2ம்படைவீடான திருச்செந்தூர் முருகன் கோவில், கடலுக்கு அருகில் உள்ள தலம் என்பதால், ஏகப்பட்ட ஸ்பெஷல் சிறப்புக்களை கொண்டுள்ளது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள கடற்கரையில் நீராடி முருகனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள்.
கந்தசஷ்டி: அதிலும், கந்தசஷ்டி திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் அங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும், இந்த முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 12-ந் தேதி தொடங்கிய இந்த கந்த சஷ்டி விழாவானது நாளை 19-ந் தேதி வரை நடக்கிறது.. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சியானது இன்று 18-ந் தேதி நடைபெற உள்ளது..
உள்ளூர் விடுமுறை: இதையடுத்து, இன்றைய தினம், தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஜி.லட்சுமிபதி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.
சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மொத்த திருச்செந்தூருமே விழாக்கோலத்துடன் காணப்படுகிறது.. தொடர்ந்து பக்தர்கள் திரண்டு வருவதால், போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூரசம்ஹாரம்: இதனிடையே, சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை முதல் திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளை நவம்பர் 18 ஆம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: "கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு 18.11.2023 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை மற்றும் பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)-இன் படி திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள நான்கு மதுபானக் கடைகள் மட்டும் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

மதுபான கடைகள்: அதாவது, வீரபாண்டியன்பட்டணம் அடைக்கலாபுரம் பகுதி, பரமன்குறிச்சி சாலை சங்கிவிளை, திருச்செந்தூர் பாளையங்கோட்டை சாலை, திருச்செந்தூரில் உள்ள குலசேகரன்பட்டினம் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நான்கு மதுபானக் கடைகளும் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றையதினம் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளதால் அந்தப் பகுதிகளில் அன்றைய தினம் மதுபான விற்பனை எதுவும் நடைபெறக் கூடாது.
டாஸ்மாக்: அன்றைய தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications