டாஸ்மாக்கில் மொத்தமாக மாறுது .. வேற லெவல் கவுண்ட்டர்ஸ்.. தீபாவளிக்கு எகிறும் வருமானம்? பலே தமிழக அரசு
சென்னை: டாஸ்மாக்குகளில் தீபாவளியையொட்டி புதிய மாறுதல்கள் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. அதேபோல, கூடுதல் சரக்குகள் டாஸ்மாக் கடைகளுக்கு வர உள்ளதால், இதுகுறித்த முக்கிய கோரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய், அரசுக்கு அதிகமாக கிடைத்து வருகிறது. அரசின் மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் கிடைத்து வருகிறது.

தற்சமயம், தமிழகத்தில் மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன. இதற்கு நடுவில் பண்டிகைகள், சிறப்பு நாட்களில் டாஸ்மாக் வருமானம் இரட்டிப்பாகிறது.
டாஸ்மாக்: வழக்கமாக பொங்கல், தீபாவளி நேரங்களில் டாஸ்மாக் வருமானம் பன்மடங்கு உயர்ந்தும் விடுகிறது.. இதனால், தமிழ்நாட்டின் டாஸ்மாக்குகளில் மதுப்பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும், பஸ் நிலையம், ரெயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட மக்கள் நெருக்கம் அதிகம் கூடும் பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் எப்போதுமே நெரிசலில் உள்ளதால், இதுபோன்ற இடங்களில் மட்டும் 2 கவுண்டர் திறக்கப்பட்டு, 2 பேர் விற்பனைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இடப்பற்றாக்குறை, ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் எல்லா கடைகளிலும் இப்படி 2 பேரை பணியில் நியமிக்க முடியாது.. அதனால்தான், தினசரி ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் 3,500 மதுக்கடைகளிலும் கூடுதல் விற்பனை கவுண்டர்களை ஒரு வாரத்திற்குள் அமைக்க அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறது.
அறிவுறுத்தல்: அதேபோல, தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் சரக்குகள் டாஸ்மாக் கடைகளுக்கு வர உள்ளதால், அவைகளை இறக்கி வைப்பதற்கும் தேவையான இட வசதிகளை உருவாக்குமாறு விற்பனை மேலாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வழக்கமாக தீபாவளியின்போது, டமாஸ்மாக் வருமானம் 3 மடங்காக பெருகிவிடும்.. கடந்த வருட தீபாவளிக்கு வெறும் 2 நாளில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை நடந்த நிலையில், இந்த தீபாவளிக்கு ரூ.600 கோடி அளவுக்கு அதிகபட்ச சரக்கு விற்பனை நடைபெறலாம் என்று கணக்கு போடப்படுகிறதாம்.
அந்தவகையில், வருகிற 30, 31-ந்தேதி, நவம்பர் 1, 2, 3 ஆகிய 5 நாட்கள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் களை கட்டும் என்பதால் கூடுதல் சரக்குகளை இருப்பு வைப்பதற்காக, இப்போதே முன்னேற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
ஜூன் முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! காலி பாட்டில் கையில் வாங்க வேண்டாம்..அமைச்சர் விக்னேஷ் உறுதி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications