டாக்டர் ஐயா அப்பவே சொன்னாரே.. இப்ப ரிக்கார்டு வைத்த டாஸ்மாக்.. காரணமே வேற போலயே.. தமிழக அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் கடைகளில், கடந்த வருடத்தைவிட இந்த வருடம் ரூ. 1, 734 கோடியாக வருமானம் அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம்?

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.. நேற்றைய தினம், மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், மது விற்பனை குறித்து தெரிவிக்கப்பட்டது.

Tasmac Tamil Nadu government

அப்போது தமிழகத்தில் 2023-24 ம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம், 45, 855.67 கோடியாக உள்ளதாக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அந்தவகையில், கடந்த ஆண்டை விட ரூ. 1, 734 கோடி அதிகரித்துள்ளது..

டாஸ்மாக்: 2018-19ஆம் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடியை தாண்டிய டாஸ்மாக் வருமானமானது, 2022-2023ம் நிதியாண்டில் 40 ஆயிரம் கோடியை தாண்டியது. பின்னர் 2022-23 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,098 கோடி வருவாய் இருந்த நிலையில், 2023-24-ல் 1, 734 கோடி அதிகரித்து 45, 855.67 கோடியாக உயர்ந்திருக்கிறது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தை பொறுத்தவரை, 4,829 கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. மது வகை மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை மற்றும் மதிப்புக் கூட்டு வரி வாயிலாக, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

வருவாய்: இப்போது 2023 - 24ல் ஆயத்தீர்வை வாயிலாக, 10,774.28 கோடி ரூபாய், மதிப்புக் கூட்டு வரியாக, 35,081.39 கோடி ரூபாய் என, மொத்தம், 45,856 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

கடந்த வருடத்தைவிட, இந்த வருடம் ரூ.1,734 கோடியாக உயர என்ன காரணம்? இனிமேல் மதுபானக்கடைகளை அரசே நடத்தும் என்று 20 வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டதையடுத்து டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.. இதற்குபிறகு எங்கெல்லாம் தனியார் கடைகள் இருந்ததோ, அவைகள் டாஸ்மாக் சார்பில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன.. அத்துடன் பல இடங்களிலும் புதிதாகவும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

வருமானம்: ஆனால் இதற்கு பொதுமக்கள் கொந்தளித்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் மூடப்பட்டன.. எனினும் வருடா வருடம் டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருமானம் கூடிக்கொண்டே வருகிறது. டாஸ்மாக் மூலம் வருமானத்தை வைத்தே அரசு தரப்பில் சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது...

ஆனால் டாஸ்மாக் மூலம் இல்லாமல், வேறு வகைகளிலும் அரசுக்கு வருவாய் ஈட்ட முடியும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார்.. இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தபோதுகூட, முதல்வர் ஸ்டாலினுக்கு இதுகுறித்த டாக்டர் ஐயா விடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

பூரண மதுவிலக்கு: ஏற்கனவே, திமுகவின் தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு பற்றி குறிப்பிடவில்லை என்று எதிர்க்கட்சிகளும் விமர்சித்திருந்தன.. ஆனால், பூரண மதுவிலக்கு என்று தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை என்றும், மது விற்பனையை குறைப்பதாக மட்டுமே திமுக கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இதற்கு விளக்கம் அளித்திருந்தார்.

எனினும், தேர்தல்வரும்போதெல்லாம் மதுவை ஒழிப்போம் என்று சொல்லும் எந்த கட்சியுமே ஆட்சிக்கு வந்ததும் அதை செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டும் தொடர்ந்தபடியே உள்ளது.. இப்படிப்ப்டட சூழலில் கடந்த வருடத்தைவிட இந்த வருடம் டாஸ்மாக் விற்பனை அதிகரிக்க என்ன காரணம் என்று அரசே விளக்கம் தந்துள்ளது.

என்ன காரணம்: கடந்த நிதியாண்டில், திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி என 8 நாட்கள் தவிர இதர நாட்களில் இயங்கியதன் மூலம் 45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கடந்த 2022-23ம் நிதியாண்டில் 44 ஆயிரத்து 121 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு மது விற்கப்பட்ட நிலையில், கடந்த நிதி ஆண்டை விட இந்த ஆண்டு ஆயிரத்து 734 கோடியே 54 லட்சம் ரூபாய் அளவுக்கு கூடுதலாக மது விற்கப்பட்டுள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியப்பு: ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பல பண்டிகைள் இந்த நடப்பாண்டில் வந்ததால் டாஸ்மாக் வருமானம் அதிகரித்திருக்கலாம் என்றே கணிக்கப்பட்டாலும், இந்தாண்டு வருமானம் பலரையும் மலைக்க செய்து வருகிறதாம்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+