Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை? தீபாவளிக்கு 3 நாள் மதுக்கடை மூட வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் சுளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகளில் புதுப்புது ரகங்களில் மதுபாட்டில்களை கொண்டுவரும் முயற்சி எடுக்கப்பட்டு வரும்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காட்டமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்.. அத்துடன், திமுக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வரும்நிலையில், வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் ,இந்த கடைகளிலிருந்தே அரசுக்கு கிடைக்கிறது..

tasmac tamil nadu government

சிறப்பு நாட்கள்: அதன்படி தினமும் 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன. இதுவே பண்டிகைகள், சிறப்பு நாட்களில் டாஸ்மாக் வருமானம் டபுள் மடங்காக பெருகிவிடுகிறது.
அதிலும் தீபாவளியின்போது, டாஸ்மாக் வருமானம் 3 மடங்காக பெருகிவிடும். இப்படித்தான் கடந்த வருட தீபாவளிக்கு வெறும் 2 நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. இந்த தீபாவளிக்கும் ரூ.600 கோடி அளவுக்கு அதிகபட்ச சரக்கு விற்பனை நடைபெறலாம் என்கிறார்கள்.

சிறப்பு கவுண்ட்டர்கள்: அதனால்தான், பஸ் ஸ்டாண்டு, ரெயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட மக்கள் நெருக்கம் அதிகம் கூடும் பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் எப்போதுமே நெரிசலில் உள்ளதால், கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்க முடிவாகி உள்ளது. தினமும் ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் 3,500 மதுக்கடைகளிலும் கூடுதல் விற்பனை கவுண்ட்டர்களை அமைக்க அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், வருகிற 30, 31-ந்தேதி, நவம்பர் 1, 2, 3 ஆகிய 5 நாட்கள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் களை கட்டும் என்பதால் கூடுதல் சரக்குகளை இருப்புகளை வைக்கும் பணிகளும் துரிதமாகி வருகின்றன.

கடுமையான விமர்சனம்: இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.. குறிப்பாக டாக்டர் ராமதாஸ் திமுக அரசை கடுமையாக விமர்சித்து தொடர்ந்து அறிக்கைகளை விடுத்து வருகிறார்.

இப்போதும் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.. இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் சொல்லும்போது, "டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுவது போல், மனமகிழ் மன்றத்தில் அனைத்து மது வகைகளும் விற்கப்படுகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில், 900 மனமகிழ் மன்றங்களும், தற்போது திமுக ஆட்சியில் 600 என, மொத்தம் 1,500 மனமகிழ் மன்றங்கள் உள்ளன. தி.மு.க., ஆட்சியில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது ஏமாற்று வேலை.

டாஸ்மாக் கடைகள்: கடந்த தீபாவளிக்கு, 467 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டைவிட, 20 சதவீதம் கூடுதலாக விற்க இலக்கு நிர்ணயிக்க, வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னும் - பின்னும் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். இதேபோல், 1,500 மனமகிழ் மன்றங்களின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய டாக்டர் ராமதாஸ், "தீபாவளி விடுமுறையால், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது புதிய ஊழலுக்கு வழிவகுக்கும். ஒரு தனியார் பஸ் நாளொன்றுக்கு 600 கி.மீ., இயக்கப்பட்டால், போக்குவரத்துக் கழகத்திற்கு, 11,400 ரூபாய் இழப்பீடு ஏற்படும்.

கோரிக்கை: புதிய பஸ்களை வாங்காமல், தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதால், பஸ் கட்டணமும் உயர்த்தப்படும். காலப்போக்கில் அரசு போக்குவரத்து கழகம், தனியார் மயமாக்கப்படும். தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டத்தை, அரசு கைவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குருபூஜை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா, குருபூஜை வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. எனவே, மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி விழாயை முன்னிட்டு மதுரையில் வருகிற 27, 28, 29 ஆகிய 3 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+