டாஸ்மாக் கடைகளுக்கு மொத்தமாய் பூட்டு.. காலவரையின்றி மூடப்படும் பார்கள்! குடிகாரர்களுக்கு ஷாக் செய்தி
சென்னை: தமிழகம் முழுவதும் இருக்கும் குடிகாரர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பனி நிரந்தரம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் ஊழியர்கள் நாளை பிப்ரவரி 17ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உள்ள மதுக் கடைகள் காலவரையின்றி மூடப்பட உள்ளது.
தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை கட்டுப்பாட்டில் டாஸ்மாக் நிறுவனம் இயங்கி வருகிறது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான சில்லறை மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

தினசரி சில்லறை விற்பனை மூலம் அரசு பெரும் வருவாய் ஈட்டுகிறது. பொதுவாக ஒரு நாளைக்கு ரூ.100 கோடிக்கும் மேற்பட்ட வருவாய் கிடைப்பதாக கணக்கிடப்படுகிறது. புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழா காலங்களில் விற்பனை மேலும் பல மடங்கு அதிகரிப்பது வழக்கம்.
டாஸ்மாக் ஊழியர் போராட்டம்
குறிப்பாக தீபாவளி காலத்தில் சில நாட்களில் மட்டும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனை நடைபெறுவது வழக்கமான நிகழ்வாகும். இதனால் டாஸ்மாக் நிறுவனம் மாநில அரசின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 180 மில்லி, 360 மில்லி, 720 மில்லி போன்ற அளவுகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
டாஸ்மாக் வேலைநிறுத்தம்
பணி நிரந்தரம், ஓய்வூதிய வசதி, பணிநிலைத்தன்மை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. தொழிலாளர் அமைப்புகளான சிஐடியு மற்றும் ஏஐடிசி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த இயக்கத்தை முன்னெடுத்து வருகின்றன. போராட்டத்தின் அடுத்த கட்டமாக, மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
மதுக்கடை மூடல்
அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வராததால், போராட்டத்தை தீவிரப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அறிவிப்பின்படி, பிப்ரவரி 17ம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் இருப்பதுடன், கடைகளை மூடி சாவிகளை நிர்வாகத்திடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால், மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் செயல்படாமல் போகும் சூழல் உருவாகும்.
தமிழக மதுபான கடைகள்
இந்த அறிவிப்பு வெளியானதும் குடிகாரர்கள் மத்தியில் பல்வேறு எதிர்வினைகள் வெளிப்பட்டுள்ளன. குறிப்பாக மதுபானம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையாக வாங்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில இடங்களில் விற்பனை தாறுமாறாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம், இந்த போராட்டத்தை தடுக்க டாஸ்மாக் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அரசுக்கு வருவாய் இழப்பு
அரசுக்குவருவாயை அள்ளித் தரும் முக்கிய துறையாக இருப்பதால், இந்த டாஸ்மாக் வேலைநிறுத்தத்தால் பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு தரப்பில் உடனடி பேச்சுவார்த்தை நடத்தப்படுமா, அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுமா என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை. மேலும், இந்த போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்தமாக பங்கேற்பார்களா என்பது குறித்தும் தெளிவாகவில்லை. குறிப்பாக அண்ணா தொழிற்சங்கம் சில அமைப்புகள் இதில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வியும் நிலவுகிறது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications