Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க பல்வேறு கெடுபிடிகள் அரங்கேறி வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சிறு வியாபாரிகள், விஷேசம் நடத்துபவர்கள் என பல்வேறு பயன்பாட்டிற்காக பணம் கொண்டு செல்வதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மதுக்கடைகளுக்கும் தேர்தல் ஆணையம் புது கடிவாளம் ஒன்றை போட உள்ளதாம். இதனால் டாஸ்மாக் பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனராம்.

இந்த தேர்தலில் முதன் முதலாக, தமிழகத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளையும் (அரசின் சார்பில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகள் உள்பட) கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதாவது, மதுக்கடைகளில் தினசரி விற்பனை, இருப்பு உள்ளிட்ட விபரங்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

TASMAC Staff Complain of Overtime Pressure as Election Commission Tightens Liquor Shop Rules

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி டாஸ்மாக் நிர்வாகம் தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்

தமிழகத்தில் உள்ள 4,800-க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளும் தங்களது தினசரி விற்பனை மற்றும் இருப்பு குறித்த முழுமையான அறிக்கையை தினமும் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் கடைகளில் உள்ள சூப்பர்வைசர்களும் விற்பனையாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் டாஸ்மாக் கடைகளின் தினசரி விற்பனை மற்றும் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தேர்தல் ஆணையம் எளிதாக கண்காணிக்க முடியும்.

கடைகள் தரும் விபரங்கள் அடிப்படையில் திடீரென விற்பனை அதிகரிக்கும் கடைகளில் அதிரடி சோதனை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாம். அதாவது, மொத்தமாக யாராவது மது பாட்டில்களை வாங்கி பதுக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளவே இந்த ஏற்பாடாம். மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் 50 சதவீதத்திற்கு அதிகமாக மதுபானங்களை இருப்பில் வைக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கண்டிசன் போட்டுள்ளதாம்.

டிஜிட்டல் நடைமுறை அவசியம்

சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்தையும் கணக்கில் கொண்டு வருவதற்காக டிஜிட்டல் பில்லிங் முறை அனைத்து கடைகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கடைகளிலும் தினசரி எவ்வளவு மதுபானங்கள் விற்கப்படுகின்றன, இருப்புகள் எவ்வளவு உள்ளன என்பதை உடனடியாக அதிகாரிகளால் கண்காணிக்க முடியும்.

ஏதேனும் பதுக்கல் அல்லது கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும்போது எளிதாக கண்டுபிடித்து நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி மதுபானங்களை ஏற்றி செல்லும் வாகனங்களையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாம். இதையடுத்து, மதுபாட்டில்கள் ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டு, அவை சரியாக வேலை செய்வதை உறுதி செய்ய மாவட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் பார்களுக்கு அதிக அளவில் மதுபானங்கள் சப்ளை செய்யப்படுவதை தடுக்கும் வகையில், அனைத்து மதுபான கடைகளிலும், பார்களிலும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

கலக்கத்தில் டாஸ்மாக் பணியாளர்கள்

தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி கட்டுப்பாடுகளால், இந்த முறை தேர்தல் நேரத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பதும், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதும் தடுக்கமுடியும் என தேர்தல் ஆணையம் நம்புகிறதாம். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறும் டாஸ்மாக் பணியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் தயாராக உள்ளதாம்.

இதனால் டாஸ்மாக் பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஏற்கனவே அதிக பணிச்சுமை இருக்கிறது என புலம்பி வரும் டாஸ்மாக் பணியாளர்கள் இந்த கட்டுப்பாடுகளை எப்படி கையாள போகிறார்கள் என்பது தான் டுவிஸ்டே..

- சிறப்பு நிருபர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+