கிளைமேட் மாறுதே.. டாஸ்மாக்கில் வரப் போகும் மிகப் பெரும் மாற்றம்! டைமிங்கை மாற்ற ரைமிங்காக கோரிக்கை!
சென்னை: அரசுக்கு வருவாய் அள்ளித் தரும் துறைகளில் ஒன்றாக டாஸ்மாக் விளங்குகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் டாஸ்மாக் பணியாளர்கள் அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். தற்போது நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மது விற்பனை நடைபெறும் நிலையில் அந்த நேரத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் விற்பனை நேரத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு இடங்களில் பலத்த மழையுடன் தொடர்கிறது. தினமும் மாலை நேரம் முதல் இரவு வரை பல மாவட்டங்களில் மழை கொட்டித் தள்ளி வருவதால், மக்கள் மட்டுமல்லாமல் அரசு துறைகள், குறிப்பாக டாஸ்மாக் ஊழியர்களும் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையால் தான், டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்யும் முயற்சி அரசு தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கமாக மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்குத் திறந்து இரவு 10 மணிவரை செயல்படுகின்றன.

டாஸ்மாக் வருவாய்
மழையால் சாலைகள் நீரால் மூழ்கி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதால் மற்றும் மழை காரணமாக இரவு நேரத்தில் வீடு திரும்புவது கடினமாக இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், குறைந்தபட்சம் பருவமழை காலம் முடியும் வரை, டாஸ்மாக் கடைகளை ஒரு மணி நேரம் முன்பே மூட வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை அரசு அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு மதுபான விற்பனை
தமிழகத்தில் டாஸ்மாக் என்பது அரசு வருவாயில் மிகப்பெரிய பங்கைக் கொண்ட துறையாக இருக்கிறது. தினசரி நேரடி விற்பனை மூலமாக மட்டும் குறைந்தது ரூ.100 கோடி வருமானம் கிடைக்கிறது. சாதாரண நாட்களில் இவ்வளவு வருமானம் கிடைத்தால், பண்டிகை நாட்களில் இந்த தொகை ரூ.400 கோடி வரை உயருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் ரூ.50,000 கோடிக்கும் மேல் வருமானம் அரசுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மூலம் தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் எனப்படும் டாஸ்மாக் தமிழகம் முழுவதும் சில்லரை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
டாஸ்மாக் மூடும் நேரம் மாற்றம்
இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான கடைகளும், அதனுடன் இணைந்த பார்களும் செயல்படுகின்றன. இந்த மதுக்கடைகளை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் 180 மில்லி, 360 மில்லி, 740 மில்லி ஆகிய அளவுகளில் விற்கப்படுகிறது. 140 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகின்றன. நாள்தோறும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் தரும் துறையாக டாஸ்மாக் இருக்கிறது. சாதாரண நாட்கள் மட்டும் அல்ல, அது வார விடுமுறை நாட்கள், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.
தினசரி டாஸ்மாக் விற்பனை
பொங்கல் தீபாவளி ஆகிய நாட்களில் 400 கோடி ரூபாய்க்கு மேல் டாஸ்மாக் விற்பனை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் டாஸ்மாக் மட்டுமல்லாது தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களோடு இணைந்த பார்கள், மனமகிழ் மன்றங்களில் இருக்கும் பார்கள், பப்புகள், கிளப்புகள் என தனியார் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். 2024 2025 ஆம் நிதி ஆண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் 50,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications