டாஸ்மாக் நேரம் மாற்றியமைப்பு.. கோர்ட்டுக்கு போன "சங்கம்".. தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறது ஹைகோர்ட்
டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் மதுபான விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2 வருடங்களாகவே கொரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்தது.. அவ்வப்போது சில நாட்கள் திறந்தாலும், தொற்று முழுமையாக நீங்காததால், அவைகள் இழுத்து மூடப்பட்டன..
பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.. இதனால், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன... பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால் அதன் நேரங்களும் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வந்தன..

நேரங்கள் மாற்றியமைப்பு
எனினும், கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்து வருகின்றன. அதேசமயம், டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி இயங்கி வந்த நிலையில், கடந்த வாரம், இந்த நேரம் மாற்றியமைக்கப்பட்டது.. டாஸ்மாக் கடைகள் கொரேனா தொற்று முன் இருந்தது போலவே, பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அத்துடன், அறிவிப்பு உடனடியாக அமலுக்கும் வந்தது.

விற்பனை
கொரோனா காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை குறைந்ததால் நஷ்டம் ஏற்பட்டதாக தமிழக அரசு அறிவித்திருந்தது... எனவே, இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்பதால் அதன் வருமானம் அதிகரிக்ககூடும். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றவும் அனைத்து டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.. ஆனாலும், டாஸ்மாக்கடைகளின் பணிநேரம் காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்ததை, 12 மணிமுதல் இரவு 10 வரை மாற்றியதற்கு தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

மனு தாக்கல்
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் நேற்றைய தினம் வழக்கு தாக்கல் செய்திருந்தது.. அந்த மனுவில், "தொழில் தகராறு சட்டம் பிரிவு 9 உட்பிரிவு ஏ ன் கீழ், தொழிற்சங்க சட்டத்தின்படி, வேலை நேரம் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு 21 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று விதி உள்ளது.. எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தன்னிச்சையாக வேலைநேரம் மாற்றப்பட்டுள்ளது.

விசாரணை
இது சட்டவிரோதம்.. எனவே, இந்த அறிவிப்பு ரத்து செய்ய வேண்டும்.. இரவு 10 மணி என்பது மக்கள் நடமாட்டம் குறைவான நேரம்.. பணப்புழக்கம் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது' என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.. இந்த மனுவானது நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு விரைவில் வரஉள்ளதாகவும் கூறப்பட்டது.

தள்ளிவைப்பு
இந்நிலையில், இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.. அப்போது வழக்கு குறித்து தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 3வது வாரத்திற்கு தள்ளிவைத்தார் நீதிபதி பார்த்திபன்.. இந்த விசாரணையின் முடிவு எப்படி இருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பு குடிமகன்களிடையே கிளம்பி வருகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications