டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா இனி நிரந்தரம்.. ஆனாலும் அடுத்த மாதமே நடக்கும் நல்ல விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 70 லட்சம் மதுபாட்டில்கள் விற்கப்படுகிறது. இதில், 180 மில்லி பாட்டில் (குவாட்டர்) 65 சதவீதமும், 360 மில்லி பாட்டில் (ஆப்) 25 சதவீதமும், 750 மில்லி பாட்டில் (புல்) 10 சதவீதமும் விற்பனையாவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் அனைத்திலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் வசதி அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது

தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் எங்கு போய் மதுபாட்டில்கள் வாங்கினாலும் குவாட்டருக்கு 10 ரூபாய் முதலும், புல் பாட்டிலுக்கு 40 ரூபாய் வரையிலும் கூடுதலாக வாங்குவது நடந்து வருகிறது. இந்நிலையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதை தடுக்க பில் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் காலி மதுபாட்டில்களை தயாரிப்பு நிறுவனங்களே திரும்பப்பெறும் முறை அமலுக்கு வர உள்ளது.

tasmac liquor

அண்டை மாநிலங்களை போல் இல்லாமல் மதுபானங்கள் விற்பனையை தமிழ்நாட்டில் அரசு தான் நடத்தி வருகிறார்கள். இதற்காக டாஸ்மாக் என்ற நிறுவனத்தை அரசு நடத்தி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் மொத்தம் 4,829 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 70 லட்சம் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரை மது வகைகள் விற்பனையாவதாகவும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதேநேரம் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்கள் மற்றும் விஷேச நாட்களில் மதுவிற்பனை வழக்கத்தைவிட இரண்டு முதல் 3 மடங்கு அதிகமாகவும் இருக்கும். தமிழ்நாட்டில் சுமார் 1000 கடைகளில் 2 லட்சத்திற்கு மேல் தினமும் மதுவிற்பனையாவதாகவும் கூறப்படுகிறது.

மதுவிற்பனையை பொறுத்தவரை 180 மில்லி பாட்டில் (குவாட்டர்) 65 சதவீதம் விற்பனையாகிறது. 360 மில்லி பாட்டில் (ஆப்) 25 சதவீதமும், 750 மில்லி பாட்டில் (புல்) 10 சதவீதமும் விற்பனையாவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் சொல்கின்றன. இந்த நிலையில், குடிமகன்கள் பலர் பாட்டில்களை வாங்கி கொண்டு வனப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்கிறார்கள், மது அருந்தியதும் போதையில் மதுபாட்டில்களை உடைத்து எறிந்து சென்று வந்தார்கள். இதனால், வன விலங்களுகளின் பாதங்களில் காயம் ஏற்பட்டு வந்தது. குறிப்பாக சொல்வது என்றால், கோவை மாவட்ட வனப்பகுதிகள், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதிகள், நீலகிரி மாவட்டம், என வனப்பகுதிகளில் குடிமகன்கள் பாட்டில்களை உடைத்து போடுவது அதிகமாக இருந்தது.

இதையடுத்து வன விலங்கு ஆர்வலர் ஒருவர் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசுக்கு சில யோசனைகளை வழங்கியது. அதாவது, டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும். மதுபாட்டில்களை விற்பனை செய்யும்போதே கூடுதலாக ரூ.10 வசூலித்துவிட்டு, காலி பாட்டில்களை கொடுக்கும்போது அதை மீண்டும் திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி, முதல்கட்டமாக வனப்பகுதிகள் நிறைந்த ஊட்டி, கொடைக்கானலில் உள்ள மதுக்கடைகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தொடங்கிய 2022-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி முதல் ஜீன் மாதம் 14-ந் தேதி வரை ஒரு மாத காலத்தில், ரூ.10 கூடுதல் கட்டணத்தில் 29 லட்சத்து 31 ஆயிரம் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன. அதில், 18 லட்சத்து 50 ஆயிரம் காலி பாட்டில்கள்தான் திரும்பி வந்தன. அதாவது, 63 சதவீத காலி பாட்டில்களே மதுக்கடைகளுக்கு திரும்பின. மீதமுள்ள 37 சதவீத மதுபாட்டில்கள் திரும்பிவரவில்லை.
அதேநேரம் பாட்டிலுக்கு தலா ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்பட்ட வகையில், ரூ.1 கோடியே 8 லட்சத்து 10 ஆயிரம் அரசுக்கு மிச்சம் ஏற்பட்டது.

இதனிடையே ஊட்டி, கொடைக்கானல் மட்டுமின்றி, பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருவாரூர், நாகை, தேனி, தர்மபுரி, கன்னியாகுமரி உள்பட 12 மாவட்டங்களில் பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டன. இந்ததிடடம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், காலி மதுபாட்டில்களை அடுத்த மாதம் (நவம்பர்) முதல் குடிமகன்களிடம் இருந்து திரும்பப்பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பணியை டாஸ்மாக் கடை ஊழியர்களிடமே வழங்க அரசு முன்வந்தது. ஆனால், அவர்கள் தற்போது இருக்கும் வேலைப் பளுவை காரணம் காட்டியதுடன், காலி மதுபாட்டில்களை வைக்க கடையில் இடமில்லை என்று மறுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, தற்போது டாஸ்மாக் நிர்வாகம் புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்களை தயாரித்து வழங்கும் குறிப்பிட்ட நிறுவனமே ஒவ்வொரு கடைகளுக்கும் தனித்தனியாக ஆட்களை அமர்த்தி காலி மதுபாட்டில்களை பெற்றுக்கொண்டு ரூ.10 திருப்பி வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். இதன்படி மது ஆலை நிர்வாகத்திடமும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

காலி மதுபாட்டில்களை மீண்டும் உபயோகப்படுத்த முடியும் என்பதால், மது ஆலை நிர்வாகமும் திருப்பி வாங்க சம்மதம் தெரிவித்திருக்கிறதாம். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட இந்த முடிவு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட இருக்கிறது. எனவே, காலி மதுபாட்டில்களை திருப்பி வாங்கும் திட்டம் அடுத்த மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+