தட்கல் டிக்கெட் இனி ஈஸி! ரயில்வே அதிரடி உத்தரவு.. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ், குட்பை ஏஜெண்ட்ஸ்
சென்னை: இந்திய ரயில்வே தனது பயணிகளின் நலனுக்காகவும், பயண அனுபவத்தை மேம்படுத்தவும் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்களை புதுசு புதுசாக செய்து கொண்டே வருகிறது. குறிப்பாக, கடைசி நிமிடத்தில் அவசரமாக பயணம் மேற்கொள்ள வேண்டியவர்களுக்கு தட்கல் முறை ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. அதில்தான் தற்போது முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.. அது என்ன தெரியுமா?
தட்கல் என்றாலே டிக்கெட் கிடைப்பது படாதபடாகிவிடும்.. எனவே இம்முறையில் நிலவும் கடும் போட்டி மற்றும் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு, 2026ம் ஆண்டிற்கான புதிய தட்கல் முன்பதிவு விதிகளை ரயில்வே நிர்வாகம் தற்போது அமல்படுத்தியுள்ளது.

ரயில்வே நிர்வாகம்
இந்த மாற்றங்களின் முதன்மை நோக்கம் என்னவென்றால், சாதாரண பயணிகள் எவ்வித தடையுமின்றி, வெளிப்படையான முறையில் டிக்கெட்டுகளை பெறுவதை உறுதி செய்வதாகும்.
சமீபகாலமாக தட்கல் முன்பதிவு தொடங்கும் சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிடுவதாகப் புகார்கள் எழுந்தன. இதற்கு பின்னால் போலி கணக்குகள் மற்றும் அதிவேகமாக செயல்படும் தானியங்கி மென்பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது ரயில்வேக்கு ஷாக்கை தந்துவிட்டது..
இத்தகைய சட்டவிரோத செயல்களை முறியடிக்கவே, இந்திய ரயில்வே மற்றும் ஐஆர்சிடிசி இணைந்து மிகவும் பாதுகாப்பான மற்றும் நவீனமயமாக்கப்பட்ட முன்பதிவு முறையை உருவாக்கியுள்ளன. இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தவுடன், உண்மையான பயனாளர்களுக்கு டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தட்கல் டிக்கெட் புதிய மாற்றம்
இந்த புதிய விதிகளின் அடுத்த ஸ்பெஷாலிட்டி என்னவென்றால்,கட்டாய அடையாளச் சரிபார்ப்பு ஆகும். இனிமேல் ஒவ்வொரு ஐஆர்சிடிசி பயனாளரும் தங்களின் கணக்கை ஆதார் அட்டையுடனோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற அடையாள ஆவணங்களுடனோ முழுமையாக இணைக்க வேண்டும்.
இந்த விரிவான கேஒய்சி நடைமுறை மூலம், ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பது அல்லது போலியான பெயர்களில் கணக்குகளை தொடங்குவது முற்றிலும் தடுக்கப்படும். இதன் மூலம் முகவர்களின் ஆதிக்கம் குறையும் என்பதுடன், முறையான ஆவணங்களை சமர்ப்பித்த உண்மையான பயணிகளுக்கு மட்டுமே தட்கல் முன்பதிவுவுக்கு வாய்ப்பு உள்ளது..
குட்பை டிக்கெட் ஏஜெண்டுகள்
பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தத் திட்டம், ரயில்வே துறையில் இது மிகப்பெரிய மாற்றமாகவே கருதப்படுகிறது. சரிபார்ப்பு பணிகள் முழுமையடையாத அல்லது குறைபாடுள்ள கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என்பதால், பயணிகள் முன்கூட்டியே தங்கள் விவரங்களை சரிபார்த்து தயார் நிலையில் வைத்துக்கொள்வது அவசியமாகும்.
இந்திய ரயில்வேயின் இந்த அதிரடி மாற்றங்கள், சாதாரண மனிதர்களும் தட்கல் டிக்கெட்டுகளை எளிதாக பெற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்வதில் இந்திய ரயில்வே ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications