பட்டு பட்டுன்னு ஊழியர்களை குறைத்த டிசிஎஸ், இன்போசிஸ், HCL.. 75000 ஐடி ஊழியர்கள் எங்கே?
சென்னை: இந்திய பொருளாதாரத்தின் முக்கிய தூணாக இருந்து வரும் ஐடி சேவைத் துறை ஏஐ மூலம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையில், நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கியுள்ளது. ஒருப்பக்கம் ஏஐ தொழில்நுட்ப சேவையில் இறங்குவதற்கு உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், லட்ச கணக்கான ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் இதற்கான பெரும் நிதி ஆதாரம் தேவை. இதேவேளையில் தொடர்ந்து லாபகரமாகவும் விளங்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் நாட்டின் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் தங்களது பென்ச் ஊழியர்கள் மீது கவனத்தை திருப்பினர். இந்திய ஐடி நிறுவனங்களுக்கு நீண்ட காலமாக பாதுகாப்பு வலையமாக இருந்த 'பெஞ்ச் ஊழியர்கள்' (Bench employees) முறையில் பெரிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய டாப் ஐடி சேவை நிறுவனங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெஞ்ச் ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 75,000 பேர் குறைக்கப்பட்டு உள்ளனர். 2 வருடத்திற்கு முன்பு இந்த 5 முன்னணி நிறுவனத்தில் மொத்தம் 3 லட்சம்மாக இருந்த பென்ச் பணியாளர் தற்போது சுமார் 2.25 லட்சமாக சரிந்துள்ளனர்.
இந்திய ஐடி நிறுவனங்களை பொருத்த வரையில் பென்ச் ஊழியர்கள் என்பது தனி வலிமையாக பார்க்கப்பட்டது. புதியாக திட்டங்கள் பெரும் போதும் உடனடியாக ஊழியர்களை நியமிக்க முடியும் வாய்ப்பை இந்த பென்ச் பிரிவு அளித்தது. ஆனால் தொழில்நுட்ப மாற்றம், ஏஐ வளர்ச்சி, புதிய திட்டங்கள் பெறுவதில் போராட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த 2 வருடமாக பென்ச் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து வருகிறது.
முன்பெல்லாம் மொத்த ஊழியர்கள் பட்டியலில் 20% க்கும் மேல் இருந்த பெஞ்ச் விகிதம், தற்போது 8% முதல் 15% வரையிலான அளவிற்கு குறைந்துள்ளது. சில நிறுவனத்தில் 8-12% வரையில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் தேவைக்கேற்ப பணியாளர்களை பயன்படுத்தும் திசையில் நகர்கின்றன.
பல ஆண்டுகளாக, ஐடி நிறுவனங்கள் திட்டங்கள் தொடங்குவதற்கு முன்பே பணியாளர்களை நியமித்து, பெஞ்ச் கையிருப்பில் வைத்திருந்தன. இதனால் ப்ராஜெக்ட்கள் தொடங்கும் போது உடனடியாக ஊழியர்கள் கிடைத்தனர். ஆனால் தற்போது சந்தை வளர்ச்சி மந்தமடைந்ததும், திறன் தேவைகள் மாறியதும், இந்த முறை அவசியமற்றதாகவும் மாறியுள்ளது.
இதற்கு ஏற்றார் போல் நிறுவனங்களும் பென்ச் ஊழியர்களின் பென்ச் காலத்தை குறைத்து புதிய திட்டத்தில் உடனடியாக சேரவும், எதிர்காலத்திற்கும் - நிறுவனத்தின் வர்த்தகத்திற்கும் தேவையில்லாத திறன்களை வைத்துள்ள ஊழியர்களை பென்ச் பிரிவுக்கு மாற்றி புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்று பணியில் அமர்த்துவதும் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் சில எண்ணிக்கை ஊழியர்கள் வெளியேற்றப்பட்டாலும், பெரும்பாலான ஊழியர்களின் திறன் வளர்ச்சி அடைந்துள்ளது மறுக்க முடியாது. இதேபோல் பென்ச் ஊழியர்கள் புதிய தொழில்நுட்பத்தில் பயற்சி பெறுவதால் வெளியில் இருந்து புதிதாக ஊழியர்களை நியமிக்க வேண்டிய எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
இப்படி பல நிறுவனங்கள் பெஞ்ச் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சில நிறுவனங்கள் பெஞ்ச் விகிதத்தை தற்போதைய அளவை காட்டிலும் 1-1.5% அளவிற்கு குறைக்க இலக்கு வைத்துள்ளன.
உதாரணமாக, டிசிஎஸ் நிறுவனத்தில், ஒரு பணியாளர் ஆண்டுக்கு அதிகபட்சம் 35 நாட்கள் மட்டுமே பெஞ்சில் இருக்க அனுமதிக்கப்படுகிறது. அதன் பின்னர் செயல்திறன் மதிப்பீடு நடைபெறுகிறது. திட்டங்களில் சேர முடியாத பணியாளர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இதே வேளையில் இத்தகைய மாற்றம் தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்ற கேள்வி எழுகிறது. தற்போது ஒட்டுமொத்த ஐடி துறை வேலைவாய்ப்பு முறையை மாறிவருகிறது. வளர்ச்சி மீண்டும் அதிகரித்தாலும், பழைய அளவிலான பெஞ்ச் அமைப்பு திரும்ப வாய்ப்பு குறைவு என்பது தான் சந்தையின் கணக்கு.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications