சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு! 3 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மாற்றம்!
சென்னை: சென்னையில் இன்று முதல் டீக்கடைகளில் டீ, காபி விலை உயர்த்தப்படுகிறது. நேற்று வரை டீ 10 ரூபாய்க்கும், காபி 12 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் புதிய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையுயர்வு 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் உயர்த்தப்படுகிறது.
என்னதான் வீடுகளில் டீ, காபி போட்டாலும் டீக்கடைகளுக்கு சென்று டீ, காபி குடிப்பதை சிலர் வாடிக்கையாக வைத்திருப்பார்கள். இதனால்தான் அதிகாலை 4 மணி முதலே டீக்கடைகள் திறந்திருக்கும்.

இங்கு ஆரம்பத்தில் டீ, காபி மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது காலத்திற்கேற்ப லெமன் டீ, பூஸ்ட், போர்ன்வீட்டா, ஹார்லிக்ஸ், கிரீன் டீ, பிளாக் டீ உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
டீக்கடையை வாடகைக்கு விட்டுவிட்டு மேலே குடியிருப்போர் கூட டீக்கடைக்கு வந்து டீ, காபி சாப்பிடுவதையே விரும்புவர். இந்த டீ, காபி இதுவரை காபி ரூ 12 க்கும் டீ ரூ 10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று முதல் டீ, காபி விலை கூடுதலாகிறது. இதை சென்னை டீ கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. டீ ரூ 15, காபி ரூ 20-க்கும் விற்கப்படுகிறது. அது போல் பால், லெமன் டீயும் 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது. காபி, ஸ்பெஷல் டீ, ராகி மால்ட், சுக்கு காபி உள்ளிட்டவை 20 ரூபாய்க்கு விற்பனையாகும்.
அது போல் பூஸ்ட், ஹார்லிக்ஸ் ரூ 25-க்கு விற்பனை செய்யப்படும். இதே பார்சல் என்றால் டீ, பால் ரூ 45-க்கும், லெமன் டீ, காபி, ஸ்பெஷல் டீ, ராகி மால்ட், சுக்கு காபி உள்ளிட்டவை ரூ 60-க்கும், பூஸ்ட், ஹார்லிக்ஸ் ஆகியவை ரூ 70-க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட டீக்கடைகள் இயங்கி வருகின்றன. பால் விலை, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீயின் விலை 2 ரூபாய் உயர்த்தப்பட்டு 12 ரூபாய்க்கும், 12 ரூபாய்க்கு விற்கப்பட்ட காபி ரூ 3 உயர்த்தப்பட்டு ரூ 15 க்கும் விற்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு, பால் விலை, காபி, டீ தூள் விலை, போக்குவரத்து செலவு உள்ளிட்ட காரணங்களுக்காக இன்று முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுகிறது. அது போல் போண்டா, பஜ்ஜி, சமோசா விலையும் ரூ 3 உயர்த்தப்பட்டு ரூ 15-க்கு விற்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications