Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது லேட் நியூஸ்தான்.. ஆனால் ரொம்ப சுவாரஸ்யமானது.. மறக்காம படிங்க!

Subscribe to Oneindia Tamil

- வருணி

சென்னை: ஆசிரியர் தினத்தில்....இவ்வளவு விஷயம் இருக்கிறதா...?! ஆமாங்க.. அதுதான் ஆச்சரியம்.. வாங்க படிக்கலாம்.

மாணவர்களின் அறியாமை என்னும் இருளை நீக்கி அவர்களின் அறிவுக் கண்களைத் திறந்து வைக்கப் பெரிதும் உறுதுணையாக விளங்குபவர்கள் ஆசிரியர்களே. எனவே தான் குழந்தைகளுக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற தாய், தந்தை உறவுகளுக்கு பிறகு ஆசிரியருக்கே அடுத்த இடம் அளிக்கப்படுகிறது. ஏனென்றால் எழுத்தறிவித்தவரே இறைவன் ஆகும். இத்தகைய சிறப்பு உலகில் வேறு எவருக்கும் அளிக்கப்பபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Teachers day celebration in world countries

பெயர் விளக்கம்: 'ஆசிரியர்' என்ற சொல்லுக்கு தவறைத் திருத்துபவர் என்று பொருள்.(ஆசு - தவறு, இரியர் - திருத்துபவர்) பொதுவாக ஆசிரியரை குரு, உபாத்தியார், வாத்தியார் என்று பல்வேறு பெயர்களைக் கொண்டு குறிப்பிடுகின்றனர். இதில் உபாத்தியார், குரு என்பன வடமொழிச் சொற்களாகும்.

இதற்கு இணையான தமிழ் சொற்கள் ஆசிரியர் மற்றும் வாத்தியார் என்பனவாகும். இதில் 'ஆசிரியர்' என்பது குறிப்பிட்ட தொழில் செய்பவரைக் குறிக்கும் சொல்லாகவும் 'வாத்தியார்' என்பது பேச்சு வழக்கு சொல்லாகவும் அறியப்படுகிறது.

வெவ்வேறு தினங்களில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் வழக்கம்:

உலகெங்கும் உள்ள ஆசிரியர்களின் தந்நிகரில்லா சேவையை மதித்து போற்றிப் பாராட்ட ஏதுவாக ஆசிரியர் தினத்தை ஏற்படுத்திக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு கொண்டாடப்படும் வழக்கமானது. பல நாடுகளில் 19ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து தொடங்கப்பட்டது. பெரும்பாலான நாடுகளில் சிறந்த கல்வியாளரைப் போற்றியோ அல்லது கல்வியில் சிறந்த மைல் கற்களாக விளங்குவதைப் போற்றியோ இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏனைய சர்வதேச தினங்களைப் ஒன்றாகக் கொண்டாடப்படுவதைப் போல் அல்லாமல் ஒவ்வொரு நாடும் வெவ்வேறு தினங்களில் ஆசிரியர் தினத்தைக் கொண்டாட இதுவே காரணமாகும்.

பல நாடுகள் யூனெஸ்கோ நிறுவனத்தால் 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அக்டோபர் 5 ஆம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகின்றன.

அவைகளில் சில நாடுகள்:

பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், செர்பியா, அர்மேனியா, பல்கேரியா, சிரியா, சவுதி அரேபியா, போர்ச்சுகல், ஐக்கிய அரபு அமீரகம், மங்கோலியா, உருமேனியா, நெதர்லாந்து, மியான்மர், மாலத்தீவு, இங்கிலாந்து, கத்தார், மொரீஷியஸ்.... இனி உலக நாடுகள் ஆசிரியர் தினத்தை எப்போது கொண்டாடுகின்றன என்பதை காண்போம்.

இந்தியா: தொடக்கத்தில் இந்தியாவில் குரு பூர்ணிமா தினத்தை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர், முனைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களிடம் பாடம் பயின்ற மாணவர்கள் அவரின் பிறந்த நாளை கொண்டாட விரும்பியபோது, தன்னுடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். எனவே 1962 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 5 ஆம் தேதியான அவரது பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பூட்டான்: நவீன கல்வியை அறிமுகப்படுத்திய பூட்டானின் மூன்றாவது அரசனான ஜிக்மி டோர்ஜி அவர்களின் பிறந்த நாளை மே 2 ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

சீனா: சீனாவில் ஆசிரியர்களின் சேவையை மதித்து போற்றும் வகையில் 1985 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதியை ஆசிரியர் தினமாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்த நாளில் கல்வியாளர்களின் கல்விச் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அதிகாரப் பூர்வ விடுமுறை அளிக்கப்படுகிறது.

Teachers day celebration in world countries

பிரேசில்: 1827 ஆம் ஆண்டு பேரரசர் முதலாம் பெட்ரோ அந்நாட்டில் அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற அரசாணையில் கையெழுத்திட்டார். 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி கல்வியைக் கொண்டாடவும், தொடர் வரும் ஆண்டின் பாடத்திட்டத்தை வகுக்கும் வகையிலான அணிவகுப்பினை ஒருங்கிணைத்தனர். பின்னாளில் இதையே அனைத்துப் பள்ளிகளும் செயல்படுத்தத் தொடங்கியதால் இந்நாட்டு அரசாங்கம் 1963 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதியை ஆசிரியர் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஈராக்: மார்ச் மாதம் 1ஆம் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை பாராட்டும் வகையில் அவர்களுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்வித்து ஆசிரியர் தினத்தை கொண்டாடுவர்.

ஜமைக்கா: மே மாதத்தில் வரும் முதல் புதன்கிழமை அல்லது மே 7ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பெற்றோர்களும், மாணவர்களும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்வர்.

ஜோர்டன்: பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தோனேஷியா: இந்தோனேஷியாவில் ஆசிரியர் கழகம் தொடங்கப்பட்ட நாளான நவம்பர் மாதம் 25ஆம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பெரு: பெரு நாட்டின் ஜனாதிபதி ஓட்ரியால் 1953 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

சிங்கப்பூர்: 2011 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை செப்டம்பர் மாத முதல் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் வரும் முதல் வெள்ளிக்கிழமை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

சோமாலியா: 1974 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் அன்றைய தினம் பொது விடுமுறையாகவும் அறிவிக்கப்படுகிறது.

அல்பேனியா: முதன் முதலாக பள்ளிகள் தொடங்கப்பட்ட வருடமான 1887 மார்ச் மாதம் 7ஆம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாணவர்களின் வாழ்க்கையை செதுக்கும் சிற்பியாகவும், வழிகாட்டும் களங்கரை விளக்கமாகவும் விளங்கும் ஆசிரியர்களின் அறப்பணியை மதித்துப் போற்றுவோம்.

உலகெங்கும் மதிப்புக்குரிய ஒரு பிரிவினர் என்றால் அது நிச்சயம் ஆசிரியர்கள் மட்டுமே.. கல்வி கற்பிப்பவர்கள் மட்டுமல்ல.. நம் வாழ்க்கைக் கதவையும் திறந்து வைத்து நம்மை இந்த உலகில் வெற்றிகரமாக நடை போட பழக்குபவர்களும் அவர்களே.. அவர்களைக் கொண்டாடுவோம்... ஒரு நாள் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+