‘ஆசிரியர்களை கைவிட மாட்டோம்..’ முதலமைச்சரிடம் இருந்த வந்த அழைப்பு.. அன்பில் மகேஸ் குட் நியூஸ்
சென்னை: அரசு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலை - சம ஊதியம் என்பதை வலியுறுத்தி 8 ஆவது நாளாக சென்னையில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பள்ளிக்கல்வி இயக்ககம் வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எழிலகம், முதன்மை கல்வி அலுவலகம் என்று ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசுத்தரப்பில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ், ஆசிரியர்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள். அவர்களை கைவிட மாட்டேன். என்று கூறியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களிடம் நானும், அதிகாரிகளும் கடந்த 7 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திருச்சியில் இருந்து விமானத்தில் வரும்போது கூட, என்ன மகேஸ்.. ஆசிரியர் பிரச்சனைக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டார்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
எங்களின் தேர்தல் வாக்குறுதி பற்றியும் எடுத்துரைத்தேன். ஓய்வூதியம் தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துவதற்கு முதலமைச்சர் வரசொல்லியுள்ளார். அந்த கமிட்டி கூட்டம் முடிந்தவுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். இடைநிலை ஆசிரியர்கள் பற்றி பேசும்போது நிதித்துறை சில கருத்துகளை என்னிடம் சொல்லியுள்ளனர். அதை தெளிவுபடுத்தும் வகையில் இன்றைக்கு நாங்கள் சில கோரிக்கைகளை வைக்கவுள்ளோம்.
ஓய்வூதியம் தொடர்பாக முதலமைச்சர் என்னிடம் என்ன அறிவுறுத்துகிறாரோ அதை நிதி குழுவில் சொல்லி நல்ல முடிவு எடுக்கப்படும். நாங்கள் வாக்குறுதியில் சொன்னதைத்தான் கேட்கிறார்கள். அவர்கள் புதிதாக எதையும் சொல்லவில்லை. பொதுவாக ஊதியக் குழுவில் உயர்வு இருக்கும். பணி நியமனம் தொடர்பாக, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் சொன்ன சம்பளம் ஒன்றாகவும், நியமனத்துக்கு பிறகு பெறும் சம்பளம் ஒன்றாகவும் இருக்கும்.
கைவிட மாட்டோம்
அந்த வித்தியாசத்தை சரி செய்ய சொல்லி கேட்கிறார்கள். அதை நிறைவேற்றி தருகிறோம் என்று சொல்லியுள்ளோம். இது என்துறை சார்ந்த பிரச்சனை. துறை சார்ந்த அமைச்சர் என்ற முறையில் அதற்கு நல்ல விடிவை கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. பொறுமையாக இருந்தாலும் அதை நிறைவேற்றுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.
நாங்கள் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். போராட்டம் நடத்துவோர் ஒரு கட்டத்தில் இருக்கிறார்கள். பேசி தீர்வு காணப்படும். தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகத்தான் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். எந்தளவுக்கு போராட்டம் நடத்த வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்கள் படித்தவர்கள். நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். போராடும் ஆசிரியர்கள் என் குடும்ப உறுப்பினர்கள். ஆசிரியர்களை கைவிட மாட்டோம்" என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications