ஓரினசேர்க்கை ஆப் மூலம் ஆப்பு! ரயில்வே ட்ராக்கில் ஒதுங்கிய விக்கி! காத்திருந்த ட்விஸ்ட்.. வார்னிங்!
சென்னை : ஓரினச்சேர்க்கை ஆன்லைன் செயலி மூலம் சாட்டிங் செய்து இளைஞரை வழிப்பறி செய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில், சாட்டிங் செயலிகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டுமென போலீசார் எச்சரித்துள்ளனர்.
இந்த நவீன செல்போன் யுகத்தில் எந்த அளவு தங்களது கருத்துக்களை பொதுமக்கள் வெளியிட முடியுமோ அதே அளவு பிரச்சனைகளும் இருந்திருக்கிறது. பண மோசடி ஏன் வாழ்க்கையே தொலைக்கும் நிகழ்வுகளும் இந்த செல்போன் செயலிகளால் நிகழ்ந்து வருகிறது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் வாழ்க்கைத் துணையைத் தேடி வாழ்க்கையையே தொலைத்தவர்கள் ஏராளம் இருக்க, தற்போது டின்டர் அன்பே உள்ளிட்ட டேட்டிங் செயலிகளும் இருக்கிறது.

ஓரினச்சேர்க்கை
இதுமட்டுமின்றி ஓரினச்சேர்க்கைக்கு கூட செயலிகள் இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இதை வைத்து மோசடி கும்பலும் தங்களது கைவரிசைகளை மற்றொருபுறம் அரங்கேற்றி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் செல்போன் ஆப் மூலம் இளைஞர்களை ஓரினச்சேர்க்கைக்கு அழைக்கும் கும்பல் அவர்களிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில்.

மெகா மோசடி
அது தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. செல்போன் ஆப் மூலம் ஓரினச்சேர்க்கையாளர்களின் எண்களை கண்டுபிடித்து அவர்களை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல் பல்வேறு புகைப்படங்களை அனுப்பி அவர்களை கவர்கிறார்கள். பின்னர் ஓரினச்சேர்க்கைக்கு சம்மதம் தெரிவிக்கும் நபர்களை தனியார் ஹோட்டல்களுக்கு அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமாகவோ அழைத்து எல்லாம் முடிந்த பின்பு அவர் வைத்திருக்கும் பணம் நகை உள்ளிட்டவற்றை மயக்க மருந்து கொடுத்தோ அல்லது கத்தியை காட்டி மிரட்டியோ வழிப்பறி செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

ஆப் மூலம் வந்த ஆப்பு
வசதி இல்லாதவர்களை இவர்கள் எதற்கும் அழைக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி மோசடி கும்பல் அடுத்தடுத்து அத்துமீறி வருவது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையில் மீண்டும் இது போன்ற சம்பவம் ஒன்று மீண்டும் நிகழ்ந்திருக்கிறது. ஆன்லைன் செயலி மூலம் சாட்டிங் செய்து இளைஞரை வழிப்பறி செய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நகை பணம் கொள்ளை
இவர் ஆன்லைன் ஓரினச்சேர்க்கையாளர் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த செயலி மூலம் பழகிய இன்னொரு நபர் அந்த நபரை தனியாக அம்பத்தூர் ரயில்வே நகர் பின்புறம் உள்ள ரயில்வே டிராக்கிற்கு வர சொல்லியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த விக்னேஷ் ஐ வழி மறைத்து அவரிடம் இருந்த தங்க சங்கிலி மற்றும் மோதிரம் செல்போன் ஆகியவற்றை பறித்து விக்னேஷை தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து விக்னேஷ் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த அடிப்படையில் அம்பத்தூர் போலீசார் சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளிகளை கைது செய்து மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

எச்சரிக்கை
சென்னையில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த இது போன்ற மோசடிகள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சாட்டிங் செயலிகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்க வேண்டுமென போலீசார் எச்சரித்துள்ளனர். முன்பின் தெரியாத நபர்களிடம் செல்போன் எண் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை கொடுக்கக் கூடாது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் குடும்பப் பின்னணி, பின்னர் வரும் பிரச்சனைகளை கருதி போலீசில் புகார் அளிப்பதில்லை எனவும் இனி அது போன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications